திருமணமான முதல் வருடத்தில் மரித்த கணவர்...! இன்றுவரை அவரது ஆன்மாவுடன் வாழ்வதாக கூறிய நடிகையால் பரபரப்பு..!
திருமணமான முதல் வருடத்தில் மரித்த கணவரின் ஆன்மாவுடன் வாழ்வதாக கூறிய நடிகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் தொலைக்காட்சித் துறையில் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று “நாதஸ்வரம்”. அந்த தொடர் மூலம் அறிமுகமான பலரும் இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றனர். அந்த தொடர் மூலம் புகழ்பெற்ற ஒரு முகம் என்றால் அவர் தான் நடிகை சண்முகப்பிரியா. சண்முகப்பிரியா முதன்முதலாக “நாதஸ்வரம்” சீரியலில் நடித்தார். அந்த சீரியல் அந்தக் காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் அவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன்பின் அவர் “வாணி ராணி”, “கல்யாண பரிசு”, மற்றும் விஜய் டிவியின் “பாரதி கண்ணம்மா” போன்ற பிரபலமான தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அவரது இயல்பான நடிப்பும், உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறனும் அவரை தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. தற்போது சண்முகப்பிரியா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் “மூன்று முடிச்சு” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரிலும் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவரது கதாபாத்திரம் ஒரு மனவலிமை கொண்ட பெண் என ரசிகர்கள் விவரிக்கின்றனர். இப்படி இருக்க கடந்த 2022-ம் ஆண்டு சண்முகப்பிரியா தனது நீண்ட நாள் காதலர் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரின் கணவர் ஒரு மாடல் மற்றும் “மிஸ்டர் தமிழ்நாடு 2022” போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்தனர். ஆனால், அதே ஆண்டில் திடீரென ஒரு துயரச் செய்தி. திருமணமான சில மாதங்களிலேயே, அரவிந்த் சேகர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது வயது அப்போது 30க்கும் குறைவாக இருந்தது. அந்த நிகழ்வு சண்முகப்பிரியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் ஒரு பேட்டியில் கூறியபோது, “அவரின் ஆன்மா என்னுடன் தான் இருக்கிறது. நான் பேசும் போது, நான் அழும் போது, அவர் எனக்குத் தெரியாமல் தன்னை உணர்த்திக் கொள்கிறார். அவர் தான் என்னை பாதுகாக்கிறார்” என கூறியிருந்தார். இந்த உணர்ச்சிமிகுந்த வார்த்தைகள் ரசிகர்களையும், அவரை அறிந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. இந்த சூழலில் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த உருக்கமான நினைவுகளில், சண்முகப்பிரியா தனது கணவரை நினைவுகூர்ந்தபோது சில தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அச்சச்சோ...காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு...! நடிகை வெளியிட்ட போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
அதில், “எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்ததும், சில நாட்களில் என் பிறந்தநாள் வந்தது. அப்போது அவன் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தான். என்னைத் தெரியாமல் என் கண்னை டாட்டூவாக கையில் போட்டுக் கொண்டான். அவருக்கு ஊசி என்றால் பயம். ஆனால், அந்த பயத்தை தாண்டி டாட்டூ போட்டான். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் நான் அவனிடம் சொன்னேன் – ‘என் கண்ணில் இரண்டு மச்சம் இருக்கிறது. அந்த டாட்டூவில் அது இல்லை. அப்படி என்றால் இது என் கண் என்று எப்படி தெரியும்? மச்சத்தை போட்டு வா’ என்றேன். அதற்கு அவன் சிரித்தபடியே சொன்னான், ‘இவ்வளவு பண்ணிருக்கேன், உனக்கு அந்த மச்சம்தான் முக்கியமா?’ என்று. அந்தச் சம்பவம் எனக்கு மறக்க முடியாதது. அந்த டாட்டூ இன்னும் அவன் கையில் உள்ளது. அதை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்” என கக்கலங்கிய படி கூறினார்.
இந்த பேட்டியின் வீடியோ வெளியான சில மணி நேரங்களுக்குள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம் அவரை மனதளவில் பாதித்தாலும், அவர் அதை தாங்கி மீண்டும் தன் தொழிலில் கவனம் செலுத்தினார். அவர் தற்போது “மூன்று முடிச்சு” தொடரில் மிகுந்த ஆர்வத்துடன் நடித்துவருகிறார். மேலும் அவர் ஒரு பேட்டியில், “வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் நடக்க வேண்டியது நடக்கும். நான் இப்போது என் பணியில் முழு கவனம் செலுத்துகிறேன். அதுவே என் கணவருக்கு நான் கொடுக்கும் மரியாதை” என்கிறார். சீரியல் உலகில் சண்முகப்பிரியா இன்று ஒரு வலிமையான கதாபாத்திரமாக மட்டுமின்றி, உண்மையான வாழ்க்கையிலும் அதே வலிமையுடன் நிற்கிறார்.
தனது துயரத்தை மனவலிமையாக்கி மீண்டும் ரசிகர்களிடம் தன்னை நிரூபித்துள்ளார். இந்த நிலையில், அவர் ரசிகர்களிடம் அடிக்கடி கூறுவது, “வாழ்க்கையில் நாம் இழந்ததை மீண்டும் பெற முடியாது. ஆனால் அதை நினைத்து துயரப்படுவது மட்டும் வாழ்க்கை அல்ல, அதை நினைத்து வலிமையாக நிற்பதே உண்மையான வாழ்க்கை” என்பது தான். இந்த வரிகளே அவரது வாழ்க்கை தத்துவத்தைச் சுருக்கிக் கூறுகின்றன. ஆகவே சண்முகப்பிரியாவின் வாழ்க்கை ஒரு உணர்ச்சிப் பூர்வமான சினிமா கதை போல இருக்கிறது. அவரது கணவர் அரவிந்த் சேகர் திடீர் மறைவு அவரை மனதளவில் உலுக்கியாலும், அவர் அதை ஒரு ஊக்கமாக மாற்றியுள்ளார்.
இன்றும் அவர் கூறுவது போலவே, “அவரின் ஆன்மா என் அருகில் இருக்கிறது. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் எனக்காக இருக்கிறார்.” என்பது அவரது காதலும், மனவலிமையும், வாழ்க்கை நம்பிக்கையும் இளம் தலைமுறைக்கே ஒரு பாடமாக உள்ளது. சீரியல் உலகின் திரையில் மட்டுமின்றி, உண்மையான வாழ்க்கையிலும் நம்பிக்கை, அன்பு, மற்றும் மன வலிமையின் பிரதிமையாக மாறியுள்ளார் சண்முகப்பிரியா.
இதையும் படிங்க: 15 வருட காத்திருப்பு...திருணம் செய்ய தடையாக இருந்த அந்த விஷயம்..! நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!