×
 

விதவிதமாய்.. வித்தியாசமாய்.. அழகழகாய்.. அற்புதமாய்.. சேலையில் ஜொலிக்கும் நடிகை சுஜிதா..!

விதவிதமான சேலையில் ஜொலிக்கும் சீரியல் நடிகை சுஜிதாவின் அழகிய போட்டோஸ் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை உலகில் குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் தொடர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். 

குடும்ப உறவுகள், சகோதர பாசம், அண்ணி-தம்பி உறவு போன்ற நெருக்கமான உணர்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர், ஒளிபரப்பாகி வந்த காலம் முழுவதும் பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: அடிக்குது வெயிலு.. தகுக்குது உடம்பு..! நீச்சல் குளத்தில் தவம் கிடக்கும் நடிகை பவித்ரா லட்சுமி..!

குறிப்பாக முதல் பாகம், குடும்பத் தழுவிய கதைக்களத்தால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அப்பா-மகன்களின் உறவை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து வருகிறது. 

காலப்போக்கில் குடும்ப அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், தலைமுறைகளுக்கிடையேயான உணர்வுகள் போன்றவை இந்த சீசனில் நுணுக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. 

இதனால், புதிய பார்வையாளர்களையும் இந்த தொடர் ஈர்த்துக் கொண்டு வருகிறது. இந்த தொடரின் முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது ‘தனம்’ என்ற அண்ணி வேடம். 

அந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் சுஜிதா.  தனது இயல்பான நடிப்பு, மென்மையான வெளிப்பாடு மற்றும் உணர்ச்சிகளை நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றின் மூலம், அவர் அந்த கதாபாத்திரத்தை உயிரோட்டமாக மாற்றினார். 

 

இதையும் படிங்க: சினிமாவுல மொழி பாகுபாடு கிடையாது.. அதுலயும் தமிழ் ரசிகர்கள் இருக்காங்களே..! நடிகை கெட்டிகா சர்மா பரபரப்பு பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share