×
 

காதலை வெளிப்படுத்த முத்தக் காட்சிகள் அவசியமில்லை - நடிகர் ஷேன் நிகம் ஓபன் டாக்..!

 நடிகர் ஷேன் நிகம் காதலை வெளிப்படுத்த முத்தக் காட்சிகள் அவசியமில்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

திரைப்பட உலகில் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் மலையாள நடிகர் ஷேன் நிகம், தனது திரைப்பயணத்தின் 25-வது படத்தில் நடித்து வருகிறார். ‘பல்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வருகிறது. உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகும் இப்படம், இரண்டு மொழிகளில் உருவாகும் முக்கிய திரைப்படமாக கருதப்படுகிறது. இப்படி இருக்க ஷேன் நிகம், ‘பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க்’ உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.

இவரது கதாபாத்திரங்கள் பலரும் அனுபவித்துவரும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை என்பதால், அவரை இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகராகவே பார்க்கின்றனர். தற்போது, ஒரு நேர்காணலில் பேசிய ஷேன் நிகம், திரையுலகத்தில் நீண்ட நாளாக விவாதிக்கப்படும் முத்தக் காட்சிகள் குறித்து தனது மனதினிலையை வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு காட்சிக்காக முத்தம் தேவையான சூழ்நிலை இருந்தாலே, அதில் நடிப்பேன். ஆனால் காதலின் நெருக்கத்தை காட்டுவதற்காக முத்தமே ஒரு வழி என்பதில்லை. அதற்கும் மேல் சிறந்த பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய நுட்பமான முயற்சிகள் இருக்கின்றன,” என்கிறார் ஷேன்.

அதன்படி அவர் பேசுகையில், "நான் நடித்த திரைப்படங்களை என் குடும்பத்தினருடன் பா‌ர்க்க விரும்புகிறேன். குடும்பம், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் உட்கார்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும். அதனாலேயே, தேவையற்ற முத்தக் காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை" என்றார். அவரது இந்த மனப்பான்மையை ரசிகர்கள் மட்டுமின்றி, திரைத்துறையினர் மற்றும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில், இவரது பார்வை உண்மையில் ஒரு சிந்தனையைத் தூண்டும் விதமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு..! ரம்யா மோகன் எழுப்பிய சர்ச்சை...சைபர் கிரைமில் புகார் அளித்த நடிகர்..!

தற்போதைய திரைப்படங்களில், பலர் விறுவிறுப்புக்காக அல்லது இளசுகளை கவரும் நோக்கில் முத்தக் காட்சிகளை இடம் பெறச் செய்கிறார்கள். ஆனால், ஷேன் நிகம் போன்ற ஒரு இளமை நாயகன், தனது கதாபாத்திரங்களை பார்வையாளர்களின் பார்வையில் யோசித்து செயல்படுவது மிகவும் மரியாதைக்குரியது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், 'பல்டி' திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் ஷேனின் நடிப்பு மட்டுமல்லாமல், அவருடைய கொள்கை மற்றும் பார்வையும் பேசப்படும் முக்கிய அம்சமாக இருக்கலாம் என திரையுலக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தனது தனித்துவமான பாணியை தக்கவைத்துக்கொண்டு, குடும்பம் மற்றும் பண்பாட்டுக் கோட்பாடுகளுடன் மோதாமல், மக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்தும் நடிகராக ஷேன் நிகம் திகழ்கிறார்.
 

இதையும் படிங்க: ரூ.26 கோடி மோசடி..! தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். ராமசாமிக்கு பிடி வாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share