ஹாட் உடையில் கிளாமரில் ஜொலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்..!
நடிகை ஸ்ருதிஹாசன் ஹாட் உடையில் கிளாமரில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே அவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவருடைய அடையாளத்தில் ஒருபோதும் முன்னேற நினைக்காத இவர், தனது சொந்த முயற்சியால்,
இன்று முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் உலகம் முழுவதும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நடிகை, கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் உருவான "உன்னைப் போல் ஒருவன்" திரைபடத்தில் முதன்முறையாக தனது பாடலை பாடினார்.
இதையும் படிங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த கூலி மெமரிஸ்..! கலக்கல் போட்டோஸ் இதோ..!
இதனால் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர், அடுத்த கட்டமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான "ஏழாம் அறிவு" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் முதன் முதலில் பாடிய பாடலும், முதன் முதலில் நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என மிகப்பெரிய புகழை தேடி தந்தது.
இந்த நிலையில், பல படங்களில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், தனியாக ஆல்பம் பாடலையும் உருவாக்குவதிலும் இவர் வல்லவராக இருப்பதால்,
இவர் தனது குரலில் பாடிய காதலிக்க நேரமில்லை பிரேக்கப் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை தந்தது.
அதன் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இவர் குரலில் இயக்கிய பாடல், மட்டுமல்லாது அதில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பல பேச்சுக்களை வாங்கித் தந்தது.
இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ருதிஹாசன் தனுஷ் உடன் "3" படத்தையும், விஜயின் வேதாளம், புலி படத்திலும், விஷாலின் பூஜை படத்திலும்,
சமீபத்தில் வெளியான "சலார்" திரைப்படத்திலும் நடித்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இதையும் படிங்க: என்ன தான் இருந்தாலும் அப்பா இல்லையா.. இப்படியா சொல்லுவாங்க - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!