×
 

சேலையில் கவர்ச்சி.. கிளாமரில் புது உணர்ச்சி..! ‘சிங்கப்பெண்ணே’ ஆனந்தி மனீஷா போட்டோஷூட் வைரல்..!

‘சிங்கப்பெண்ணே’ ஆனந்தி மனீஷா நடத்திய அழகிய போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சி உலகில் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றாக சிங்கப்பெண்ணே திகழ்கிறது.


குடும்ப பின்னணி, உறவுகள் மற்றும் பெண்மையின் வலிமையை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடர், ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

குறிப்பாக, இதில் ஆனந்தி என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள Manisha, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

இதையும் படிங்க: நாகரீக அரசியலை கற்றுக்கொள்ளுங்கள்..! நடிகைகளை இழுக்கும் பேச்சுக்கு இயக்குநர் அமீர் கண்டனம்..!

‘சிங்கப்பெண்ணே’ தொடரில் ஆனந்தியாக நடித்துவரும் மனீஷா, தனது இயல்பான நடிப்பு மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் மூலம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

கதையின் முக்கிய திருப்பங்களிலும், குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் காட்சிகளிலும் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சின்னத்திரையில் கிடைத்த இந்த பிரபலத்துடன் சேர்த்து, சமூக வலைத்தளங்களிலும் மனீஷா மிகுந்த ஆக்டிவாக உள்ளார்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் தினசரி வாழ்வின் சிறு சிறு தருணங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களுடன் அவரை மேலும் நெருக்கமாக்கியுள்ளது.

அவருடைய ஒவ்வொரு பதிவும் வெளியானவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறுவது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சேலையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், மனீஷா மிகவும் எளிமையான மற்றும் பாரம்பரிய அழகில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட மேக்கப் இல்லாமல், இயல்பான முகபாவனைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த ஸ்டில்கள், “எளிமையே அழகு” என்ற கருத்தை நினைவூட்டுகின்றன என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘ஜன நாயகன்’ வழக்கு திரும்ப பெறப்பட்டது: மும்பையில் மறுதணிக்கை நிறைவு – தேர்தல் ஆணைய பார்வைக்கு பரிந்துரை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share