வச்சான் பாரு ஆப்பு..! மீனாவின் வாழ்க்கை டோட்டலா குளோஸ்.. ரோகிணி வச்ச செக் அப்படி - 'சிறகடிக்க ஆசை' திக்திக் எபிசோட்..!
மீனாவின் வாழ்க்கை டோட்டலா குளோஸ் பண்ண ரோகிணி வச்ச செக் தான் இன்று 'சிறகடிக்க ஆசை'யின் திக்திக் எபிசோட்டாக உள்ளது.
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதை அடிச்சிழுக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய சம்பவங்கள், ரசிகர்களை மிகுந்த பரபரப்பில் வைத்துள்ளது. ரோஹினி, தொடரின் கதையில் தனது பெரிய ரகசியத்தை மறைத்து, பல கேடித்தனங்களை செய்து வந்துள்ளார். ஆனால் அவர் எப்போது சிக்குவார் என்பது குறித்து தொலைக்காட்சி ரசிகர்கள் பல வாரங்களாக ஆவலுடன் காத்திருந்தனர்.
அந்த நாள் தற்போது வந்து பலரையும் மகிழ்ச்சியில் வைத்து உள்ளது. காரணம் ரோஹினி சிக்கியுள்ளார், ஆனால் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், உண்மையில் சிக்கியவர் மீனா தான். இதனால் கதையின் திருப்பம் இன்னும் தீவிரமானதாக மாறியுள்ளது. இந்த புதிய சம்பவத்தில் ரோஹினி தனது அப்பாவிற்கு திதி கொடுக்கும்போது, மீனா எல்லாவற்றையும் நேரில் கண்டு ஷாக் அடைகிறார். இத்தனை நாள் அனைவரையும் ஏமாற்றிய ரோஹினியை, மீனா கோபத்தில் பளார் விடுகிறார். அவர், “வீட்டில் அனைவருக்கும் சொல்லியே தீருவேன்” என்ற உறுதியான வார்த்தைகளை கூறி, உண்மையை சொல்ல முயற்சி செய்கிறார்.
இதன் மூலம் தொடரில் ஒரு மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுகிறது. ஆனால் ரோஹினி, தனது மகனின் பாதுகாப்புக்காக எல்லாம் செய்ததாக சொல்லி எவ்வளோ கெஞ்சி பார்க்கிறார். ஆனால் மீனா மனம் இறங்குவதாக தெரியவில்லை எனவே உஷாரான ரோகிணி “இந்த உண்மையை வீட்டில் கூறினால் என் வாழ்க்கையே போய்விடும். நான் உயிருடன் இருப்பதில் எந்த பயனும் இல்லை. நீங்கள் வீட்டில் இதை கூறினால் நானும் என் மகனும் இங்கேயே உயிரை விட்டு விடுவோம்” என செக் வைக்கிறார்.
இதையும் படிங்க: டாக்டர ரெடி பண்ணி வச்சிக்கோங்க பாஸ்..! தமன்னா கமிட் ஆகியுள்ள கிளாமர் ஆட்டத்துல எத்தனை மனசு உடையப்போகுதோ..!
இதன் பின்னர், மீனா, ரோஹினியின் அச்சுறுத்தலால், வீட்டில் எதுவும் சொல்ல மாட்டேன் என சொல்ல இந்த முறை நம்மை ஏமாற்றி விட்டனர். இப்போது, தொடரின் கதையில் வீட்டு உறவுகள் எப்படி மாறும், விதி ரோஹினி வாழ்க்கையை எப்படி விளையாடும் என்பதே மக்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. ரோஹினியின் ரகசியத்தால் ஏற்படும் பரபரப்பு, மீனாவின் கோபம் மற்றும் குடும்ப உறவுகளின் மோதல்என எல்லாம் ஒன்று சேர்ந்து கதையை மேலும் தீவிரமாகவும், கலக்கலப்பாகவும் மாற்றியுள்ளது. இதனைத் தவிர, தொடரின் விருப்பமான பகுதி என்றால், இத்தகைய சிக்கல்கள், எதிர்பாராத திருப்பங்கள் தான்.
ரோஹினி, மீனா மற்றும் விதி இடையேயான மோதல்கள், உண்மை வெளிப்படும் நாளை மக்கள் ஆவலுடன் காத்திருக்க வைக்கின்றன. ரோஹினி தனது மகனின் பாதுகாப்பையும், தனது வாழ்வையும் முன்னிலைப்படுத்தி எடுத்துள்ள முடிவு, கதையில் மிகப்பெரிய திருப்பமாக மாறியுள்ளது. சிறகடிக்க ஆசை தொடரின் புதிய அப்டேட்கள், பரபரப்பான சம்பவங்கள், கதாபாத்திரங்களின் மனச்சிக்கல்கள் என அனைத்தும் ரசிகர்களை அடுத்த தொடர்களுக்காக காத்திருக்க வைக்கின்றன. ரோஹினி சிக்கல், மீனா கோபம், குடும்ப உறவுகளில் உருவாகும் மோதல்கள், தொடரின் கதையை மேலும் தீவிரமானதும், கலக்கலப்பானதும் மாற்றியுள்ளது. இப்போதைய பரபரப்பான சம்பவங்கள் தொடரின் ரசிகர்களுக்கு ஒரு அடித்தளத்தில் அதிர்ச்சியையும், க்ரிஸ்பியான சுவாரஸ்யத்தையும் வழங்கி வருகின்றன.
ரோஹினி மற்றும் மீனா இடையேயான மோதல், விரைவில் முத்துவுக்கு தெரிந்தால் கன்பார்ம் ஒரு குறும்படம் இருக்கும் என ஆணித்தரமாக நம்பலாம்.. ஆனால் இயக்குனர் என்ன செய்ய காத்திருக்கிறார் என்பது நமக்கு தெரியாதே.. அதனால் கண்டிப்பாக சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என நம்புவோம்..
இதையும் படிங்க: அது எப்படி திமிங்கலம்..! நடிகர் விஜயை திரிஷா வாடா.. போடான்னு கூப்பிட முடியும்..! ஏதோ இருக்கு.. இயக்குநர் சொல்றாரே..!