“சிறகடிக்க ஆசை” ரசிகர்களின் மனம் கவர்ந்த நீத்து..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் நடிகை ஹாசினின் புதிய போட்டோஸ்..!
“சிறகடிக்க ஆசை” ரசிகர்களின் மனம் கவர்ந்த நீத்துவின் புதிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான புதிய முகங்கள் அறிமுகமாகினாலும், சிலர் மட்டுமே குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடிக்க முடிகிறது.
அந்த வரிசையில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் நடிகை ஹாசின்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் நீத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் திரைநேர்த்தியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!
சீரியலில் ஒரு புறம் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ஹாசின், மறுபுறம் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகும் போதெல்லாம் அவை ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெறுவது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் தற்போது நடிகை ஹாசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சின்னத்திரை வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் தற்போது குடும்ப ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப உறவுகள், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கைச் சவால்களை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நான் நிம்மதியா ஓய்வெடுக்கணும்.. பிளீஸ்..!! பாரதிராஜாவின் கடைசி ஆசை.. நிறைவேற்றிய பாசமகள்..!