×
 

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் கவனம் பெற்ற யுஹானி ஸ்ரீ..!! சேலையில் கலக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வைரல்..!

சீரியல் நடிகை யுஹானி ஸ்ரீ சேலையில் கலக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வைரல் ஆகிவருகின்றன.

சின்னத்திரை ரசிகர்களிடையே தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் தொடர்களில் ஒன்றாக ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

குடும்ப உறவுகள், உணர்ச்சி போராட்டங்கள் மற்றும் நாளந்தோறும் நிகழும் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடருக்கு, ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ரவி மோகன்..!! வாழ்க்கையில் விடுதலை வேண்டும்.. மனம் கசந்து அழுதபடி சாமி தரிசனம்..!

இந்த தொடரில் சமீபத்தில் புதிதாக இணைந்த கதாபாத்திரம் தான் ஸ்வேதா. இந்த கதாபாத்திரத்தின் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்திருப்பவர் நடிகை யுஹானி ஸ்ரீ.

அவரது வருகை கதைக்கு புதிய திருப்பத்தை கொடுத்துள்ளதுடன், ரசிகர்களின் கவனத்தையும் விரைவாக ஈர்த்துள்ளது.

சீரியலில் ஸ்வேதா கதாபாத்திரம் அறிமுகமான சில எபிசோட்களிலேயே, அந்த கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள திருப்பங்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக யுஹானி ஸ்ரீயின் இயல்பான நடிப்பு மற்றும் திரை வெளிப்பாடு, அவருக்கு உடனடியாக நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.

சின்னத்திரையில் புதிய முகங்கள் தோன்றும் போது, அவர்களின் நடிப்பு திறன் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், யுஹானி ஸ்ரீ தனது முதல் சில காட்சிகளிலேயே ரசிகர்களின் கவனத்தை பெறும் வகையில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வேதா கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பங்களில் ஒன்றாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை யுஹானி ஸ்ரீ தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த புகைப்படங்களில் அவர் பாரம்பரிய உடை மற்றும் நவீன ஸ்டைல் இரண்டிலும் அழகாக தோன்றியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும், கருத்துகளையும் குவித்து வருகின்றன. “சின்னத்திரையில் புதிய அழகு முகம்”, “ஸ்வேதாவாக மட்டுமல்ல, ரியலாகவும் அழகு” என ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கண்ணா.. 'மங்காத்தா 2' பார்க்க ஆசையா..!! அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share