அண்ணாமலை குடும்பத்தில் மீண்டும் போலீஸ்..! ஷாக்கில் முத்து - மீனா.. வயித்தெரிச்சலில் விஜயா - மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!
சிறகடிக்க ஆசையில் இன்று அண்ணாமலை குடும்பத்தில் மீண்டும் போலீஸ் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற தொடரில் தினமும் புதிய சஸ்பென்ஸ், உணர்ச்சி, எதிர்பாராத திருப்பங்கள் என தொடர்கதையை மேலும் விறுவிறுப்பாக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப உறவுகள், நம்பிக்கை, துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடரில், இன்று ஒளிபரப்பான எபிசோடு முழுவதும் பரபரப்பாகவும் நகைச்சுவை கலந்த குழப்பங்களோடும் திரையரங்க அனுபவத்தை கொடுத்தது.
முக்கியமாக, மனோஜுக்கான இரண்டாவது திருமணப் பேச்சு, அந்தப் பெண்ணின் அதிர்ச்சி தரும் ரகசியம், ரோகிணியை பழிவாங்க மனோஜ் தீட்டும் மறைமுகத் திட்டம், முத்து–மீனா வீட்டில் நடந்த அசாதாரண சம்பவம் என இவை அனைத்தும் சேர்ந்து இன்றைய எபிசோடு ரசிகர்களை ஈர்த்தது. எபிசோடு தொடக்கத்திலேயே மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பார்க்கப்பட்ட யமுனா அவருடன் பேசும் காட்சியே பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தது. சாதாரணமாக, மணமகள்-மணமகன் சந்திப்பு என்பது எடுப்பான உரையாடல்களாகவே இருக்கும். ஆனால் யமுனா சொன்ன ரகசியம் விஷயம் வேறே..
அவர் அமைதியாகச் சொல்லத் தொடங்கும் கதை, மனோஜின் முகத்திலேயே, பார்வையாளர்களின் முகத்திலும் அதிர்ச்சி நகைச்சுவை கலந்த எதிர்வினையை உண்டு செய்தது. யமுனா கூறுகிறார்: முதல் முறை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் அப்பா இறந்துவிட்டார். இரண்டாவது முறை நிச்சயிக்கப்பட்டவரின் அம்மா இறந்துவிட்டார். மூன்றாவது முறை மாப்பிள்ளையின் அப்பாவும் அம்மாவும் இருவரும் சேர்ந்து இறந்துவிட்டார்கள். நான்காவது முறை மாப்பிள்ளையின் குடும்பமே விபத்தில் இறந்துவிட்டது.
இதையும் படிங்க: ஒருபக்கம் சீதாவின் தாலியை திருடிய பெண்.. மறுபக்கம் அண்ணாமலையின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!
இந்த தகவல்களை கேட்ட மனோஜின் கண்களில் பயம் எவ்வளவுதான் ஒளித்தாலும் பார்வையாளர் புரியும்படி இருந்தது. “அடுத்தது என்னையும் தான்…?” என்ற பயத்தில் உள்ளுக்குள் நொறுங்கினாலும், வெளியில் அமைதியாக பேச முயற்சித்த மனோஜை காமெடி பாணியில் எடுத்து காட்டியுள்ளனர்.
இறுதியில், “நான் யோசித்து சொல்றேன், நீ போற” என்று யமுனாவை அனுப்பிவிட்டாலும், அந்த நிமிடம் முதல் யமுனாவைப் பார்த்ததே வாழ்க்கை ரிஸ்க்கு என்று நெஞ்சுக்குள் முடிவு செய்து விடுகிறார். இதற்கிடையில், மற்றொரு கதைக்கோடு அண்ணாமலை வீட்டில் நடக்கிறது. மீனா தன் வீட்டிற்கு திரும்பி வந்ததால், அண்ணாமலை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்கிறார். பரசு, பார்வதி, சீதா உள்ளிட்ட நண்பர்களும் அக்கம்பக்கத்தினர் பலரும் வீட்டிற்கு வருகிறார்கள்.
அங்கே சீதா வந்ததைப் பார்த்த அண்ணாமலை, “அருண் உன் மேல் கமலா கோபம் குறைந்தாச்சா?” என்று கேட்க, சீதா அதை உறுதிப்படுத்தி கூறுகிறார். அந்த சாந்தமான சூழ்நிலைக்குள் திடீரென போலீசார் வருவது அனைவரையும் பதறச் செய்கிறது. முத்து பயந்து.. “என்ன சார்… ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, போலீஸ் அதிகாரி நகைச்சுவை கலக்கி..“நாங்க வந்தாலே பிரச்சனையா?” என்று பழகும்படி பேசுகிறார்.
பின்னர் உண்மை வெளிவருகிறது — முன்பு நடந்த திருட்டு சம்பவத்தில் மீனா–முத்துவின் உதவியால், ஒரு தம்பதியினர் நகைகளை மீட்டுள்ளனர். அதற்காக நன்றி தெரிவிக்கவும், ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கவும் போலீஸுடன் அவர்கள் வந்து இருக்கிறார்கள். முத்து முதலில் பரிசை மறுக்க, அண்ணாமலின் வற்புறுத்தலால் அதைப் பெறுகிறார். இந்த நன்றி நிகழ்ச்சியைப் பார்த்த விஜயா உள்ளுக்குள் பொங்கி எழுகிறார். உடனே மனோஜை அறைக்குள் அழைத்து, “என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரோகிணியை எப்படி சும்மா விடுறது? அவ அவ்வளவு ஈஸியா தப்பிச்சு போகக்கூடாது” என்று கொதித்துக்கொள்கிறார்.
அதற்கு மனோஜ் ஒரு சிரிப்புடன், “என்னிடம் ஒரு ஐடியா இருக்கு…” என்று பதிலளிக்கிறார். அதற்குப் பிறகு மனோஜ் ஒரு ஷோரூமுக்குள் சென்று ரோகிணிக்கு போன் செய்கிறார். அந்த அழைப்பில், இதுவரை மனோஜ் தன்னைத் தவிர்த்து வந்தாலும், அவர் இப்போது இனிதாகப் பேசுவதைக் கேட்ட ரோகிணி அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியடைகிறார். மனோஜ்: “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். நீ வரணும்” என சொல்ல ரோகிணி: “நீ எங்க சொன்னாலும்னா வருவேன்.” போன் முடிந்தபோது ரோகிணி மிகுந்த பாசத்துடன் “I love you…” என்று சொல்கிறாள்.
மனோஜும் கட்டாயப்பட்ட சிரிப்புடன் “I love you too…” என்று சொல்லி போனை வைக்கிறார். இது ரோகிணியின் மனதில் இனிமையையும், அதே நேரத்தில் ஒரு சிறு சந்தேகத்தையும் உண்டாக்குகிறது. “இத்தனை நாள் வெறுத்த மனோஜ் இப்போ ஏன் இவ்வளவு பாசமா பேசுறான்?”
என்று யோசித்தாலும், உடனே தன்னையே நம்ப வைத்து, “அவனால என்னை மயக்க முடியாது… அவனுக்கு அது அளவுக்கு புத்தி இருக்காது” என்று நினைத்து, அவன் சொன்ன இடத்திற்கு கிளம்புகிறாள்.
இன்றைய எபிசோடு பல குழப்பங்களோடும் சஸ்பென்ஸ் சுழலோடும் முடிகிறது. முக்கியமாக மனோஜ் ரோகிணியை சிக்க வைக்க என்ன திட்டம் போட்டுள்ளார்? அந்த திட்டத்தில் யாரெல்லாம் தொடர்பு? ரோகிணி இந்த வலையில் சிக்கப்போகிறாளா, இல்லை மனோஜின் திட்டம் புரிந்து திரும்பப் போகிறாளா? யமுனா கூறிய ரகசிய வரலாறு என்பதே உண்மையிலேயே ஏதாவது அபாயத்தின் அறிகுறியா? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க அடுத்த எபிசோடைக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இதையும் படிங்க: கண்ட கனவு நினைவானது..! ரூ.80 லட்சம் மதிப்புள்ள BMW காருக்கு சொந்தக்காரியான நடிகை கிரேஸ் ஆண்டனி..!