இசையமைப்பாளர் அனிருத்தின் பிடியில் ‘மதராஸி’..! வெளியானது பர்ஸ்ட் சிங்கிள் ‘சலம்பல’..!
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பர்ஸ்ட் சிங்கிள் ‘சலம்பல’ வெளியானது.
தமிழ் சினிமாவில் குடும்பங்கள் முழுவதும் விரும்பும் நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான அவரது ‘அமரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது, பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதோடு, இயக்குநர் முருகதாஸின் பாராட்டத்தக்க விதத்தில் உருவான படைப்பாகவும் கருதப்படுகிறது. ‘மதராஸி’ திரைப்படம், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தக் கதாபாத்திரங்கள் படத்தின் கதையம்சத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்க இந்த படத்துக்கு இசையமைத்துள்ளவர் அனிருத் ரவிச்சந்தர்.
இவரது இசை, சிவகார்த்திகேயன் படங்களில் பெரும்பாலும் ஹிட் ஆவதைப் பார்த்துள்ளோம். இந்த முறை மதராஸி படமும், அதே இடத்தை பிடிக்கும் வகையில் அனிருத் தனது இசையில் தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ‘சலம்பல’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை, இசை ரசிகர்கள் ஏற்கனவே கவனிக்கத் தொடங்கி விட்டனர். பாடலை சாய் அபயங்கர் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார். பாடலின் வரிகளை ‘சூப்பர் சுப்பு’ எழுதி, இளையர்களை கவரும் ரிதமில், நகர்ப்புற மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்..!
மதராஸி படத்தின் ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு உரிமையை பிரபல இசை நிறுவனமான ஜங்கிலி மியூசிக் பெற்றுள்ளது. இதில் படத்தின் பிற பாடல்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்த சூழலில் படக்குழு ‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு இது மிக முக்கியமான ரிலீஸாகக் கருதப்படுகிறது. ‘கத்தி’, ‘துப்பாக்கி’, ‘சர்க்கார்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக ‘மதராஸி’ மூலம் திரும்பியுள்ளார். இந்த படம் அவரது சமூக பிரதிபலிப்பை வெளிக்கொண்டுவரும் படமாக இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘சலம்பல’ பாடல் ரிலீஸான பின்னர், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
பாடலின் பீட், காட்சியமைப்பு மற்றும் சாய் அபயங்கரின் குரல், எல்லாமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், மதராஸி திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படமாகவும், முழு பிளவுன் ஆக்ஷன் மற்றும் பாப்புலர் கலாச்சாரத்துடன் கூடிய மெசேஜ் படம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘மதராஸி’ பட முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு..! ட்ரெண்டிங்கில் sk-வின் “சலம்பல” பாடல் வீடியோ..!