×
 

விஜய் இடத்தை நிரப்ப வந்த எஸ்.கே..! ரசிகர்கள் கோஷங்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில்..!

சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை நிரப்புவார் என ரசிகர்கள் கோஷங்களுக்கு நச்சென பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் “மதராஸி”, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவரும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பில் அனிருத் தன் சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூத்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் "மதராஸி" படத்தைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்தார். அதன்படி அவர் பேசுகையில் “இது ஒரு முழு மற்றும் முழுமையான மாஸ் கமர்ஷியல் படம். ஏற்கனவே நான் நடித்த எந்தப் படத்திலுமே இந்த அளவுக்கு ஆக்‌ஷன் செய்யவில்லை. இது எனக்கே புதிதாக இருந்த அனுபவம். படம் எண்டர்டெயினிங் மற்றும் பேஷனாக இருக்கும். காதலும் இருக்கு, காமெடியும் இருக்கு, அதே நேரத்தில் சுவாரசியமான திருப்பங்களும் இருக்கும்.. ஏ.ஆர். முருகதாஸுடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. ஆனால் அவர் என்னிடம் கொண்டிருந்த எதிர்பார்ப்பு மிக அதிகம். 'இந்த கேரக்டருக்கு ஒரு ஹெவியர் லுக் வேண்டும்' என்று ஆரம்பத்திலேயே கூறினார். எனவே, உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நிலை என எல்லாவற்றிலும் முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் சவாலானதுதான்” என்கிறார் சிவகார்த்திகேயன். படத்தில் வரும் கதாநாயகனின் தோற்றமே கதையை நம்முடன் பேசும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றதையால், முருகதாஸ், “பாயிண்ட்களில் அந்தக் கேரக்டரை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த மாஸ் பவர் தெரிகணும்” என்று கூறியுள்ளார். மேலும் “மதராசி படம் ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் மனித உறவுகளும், பிரதேச அரசியலும், சமூகச் சூழல்களும் கலந்து சொல்லப்படும் படம். படம் துப்பாக்கியை பற்றியது தான். ஆனால் வெறும் ஆயுதமாக அல்ல, அதன் பின்னால் உள்ள அதிகாரத்தையும், அதன் தவறான பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகிறது. வடக்கிலிருந்து வரும் வில்லன் எப்படியெல்லாம் நம்முடைய ஹீரோவை எதிர்கொள்கிறார், நம்ம ஹீரோ அதற்கு எப்படிப் பதிலளிக்கிறார் என்பதே கதையின் மையம்” என்றார்.

சாய்பல்லவியுடன் ‘அமரன்’ படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி போலவே, மதராசி படத்தில் ருக்மணி வசந்துடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருப்பதாக கூறுனார் சிவகார்த்திகேயன். அதன்படி “ருக்மணி ஒரு நல்ல கலைஞர். இந்தக் கதைக்கு அதிகமான ஜோடியாக உள்ளார். கதையின் ஓட்டத்தில் காதல் சிக்கனாக இருப்பதால், அதை யதார்த்தமாக கொண்டு செல்ல ருக்மணியின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது,” என அவர் கூறுகிறார். கடந்த படங்கள், மற்றும் கதையின் தேர்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தன்னை சுவாரஸ்யமான கதைகளில் தேர்வு செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த முயற்சியின் ஒரு பகுதியாக “மதராசி” இருப்பதாகவும் கூறுகிறார். “‘டாக்டர்’ படம் டார்க் ஹியூமருடன் வந்தது. இயக்குநர் நெல்சன் அந்த படத்தைக் கமர்ஷியலாக மாற்றியது அவ்வளவு எளிதல்ல. அதேபோல, 'அமரன்' படம் ஒரு வாழ்க்கை வரலாறு. அந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு அந்தக் கேரக்டரில் இடம் பிடிக்க முடியும் என்று உணர்ந்தேன். ஆனால், 'மதராசி' மட்டும் பாசம், போராட்டம், ஆக்‌ஷன், காதல் என அனைத்தும் கலந்து அமைந்த கமர்ஷியல் ஹை ஒக்டேன் படமாக அமைந்தது” என்றார்.

இதையும் படிங்க: தெலுங்கு படங்களை குறித்து இப்படி சொல்லிட்டாரே..! நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!

பின்பு பத்திரிகையாளர்கள் “முதலில் இருந்தது எம்.ஜி.ஆர்., சிவாஜி. அடுத்ததாக ரஜினி, கமல். பிறகு விஜய், அஜித். இப்போது ரஜினி தொடர்ந்து நடித்து வருகிறார். கமல் மற்றும் விஜய் அரசியலில் சென்று விட்டனர். அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் உள்ளது. அடுத்த ஹீரோ நீங்கள் தானா?” என கேட்டனர். அதற்கு பதிலளித்த சிவா, “மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் உழைக்கத் தயார். நானாகவே இப்படி ஆக வேண்டும் என்று நினைத்தால் குழம்பி விடுவேன். ஆனால் மக்களுக்கு நல்ல, தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது என் ஒரே குறிக்கோள். அதில் தான் என் முழு கவனமும் இருக்கிறது” என்றார். “மதராசி” திரைப்படம் ரசிகர்களுக்கு வெறும் வெடிப்பு ஸ்டண்ட் காட்சிகளைக் காட்டுவதற்கான மேடையாக இல்லாமல், சமூகப் பின்னணியுடன் கூடிய ஒரு முக்கியமான செய்தியை எளிய, நகைச்சுவையோடு, ஆக்‌ஷனோடு, பாசத்தோடு கொண்டு வருகிறது. இதுவே முருகதாஸ் படங்களின் மிகப்பெரிய பலம்.

ஆகவே “மதராசி”, சிவகார்த்திகேயனின் நடிப்பில் ஒரு புதிய அத்தியாயமாக மட்டுமல்லாமல், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இன்னொரு முக்கியமான சமூகக் கருத்தோடு கூடிய மாஸ் படம் ஆகும்.  படம் இன்று திரையரங்குகளில் வெளியகி இருக்கிறது. ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்னைக்கு சிவகார்த்திகேயன் வீட்டில் என்ன விஷேசம்..! மனைவிக்கு சர்பரைஸ் கொடுத்து அசத்துறாரே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share