×
 

நான் அவர் மேல செம கோபத்தில் இருந்தேன்.. ஆனா ஒரே போன் காலில் என்ன ஆச்சி தெரியுமா..! SK-வின் ஓபன் ஸ்டேட்மென்ட்..!

பல நாட்களாக மறைத்து வைத்த SK-வின் ரகசியத்தை மேடையில் ஓபனாக பேசி இருக்கிறார்.

தமிழ் திரைப்படத் துறையில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தயாரிப்பாளர் திறமைகளில் முன்னணியில் நிற்பவர் சினிஷ். சமீப ஆண்டு களில் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், தற்போது தனது Soldiers Factory தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இரண்டு முக்கியமான படங்களுக்கு களம் தயாரித்துள்ளார். அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ மற்றும் பைனலி பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ என்ற இரு படங்களின் தொடக்க விழா நேற்று சென்னையில் மிக விமர்சையாக நடந்தது.

திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய முகங்கள் இதில் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் பா. இரஞ்சித், வெங்கட்பிரபு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவா, ஆர்யா, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்று இரு படங்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சினிமா உலகில் புதிய முயற்சிகள் மிக முக்கியமானவை என அனைவரும் கருத்து தெரிவித்த நிலையில், இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவுக்கு புதிய திசை காட்டக்கூடியவை என்பதிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்க சிவகார்த்திகேயன் மேடையில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். விழாவின் சிறப்பம்சமாக நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசிய உரை அமைந்தது. அவரது உரை பலரையும் சிரிக்க வைத்ததோடு, திரையுலகில் அவருடைய ஆரம்ப கால போராட்டங்களை நினைவூட்டியது.

அதன்படி சிவகார்த்திகேயன் பேசுகையில், “பல வருடங்களுக்கு முன்பு, நான் சினிஷின் அலுவலகத்தில் இருந்தபோது, திரைத்துறையில் நான் என்னவாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார். அப்போது நான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தேன். அதே சமயம் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவியாளராக இருந்தபோது ஒரு சிறிய நகைச்சுவை வேடத்திலும் நடித்தேன். எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற பெரிய கனவு அவ்வளவு வலுவாக இருந்தது இல்லை. இருந்தபோதும் ‘ஹீரோவாக வேண்டும்’ என்று சொல்லி விட்டேன். அதை கேட்டதும், சினிஷ் உடனடியாக, ‘சிவா, உங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற வேலை?’ என்று கேட்டார். உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு, அதனாலே நகைச்சுவை நடிகராகவே தொடருங்கள் என்றார்.

இதையும் படிங்க: டேன்ஸிங்க் ரோஸாக மாறிய சிவகார்த்திகேயன்..! ஹைப்பை கிளப்பும் sk-வின் 'பராசக்தி' பட First Single ரிலீஸ்..!

அவர் சொல்லியதை நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. வேலைகளில் மூழ்கிப்போனதால் அதை மறந்தே விட்டேன். ஆனால், நான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சில வருடங்கள் கழித்து, திடிரென்று சினிஷ் என்னை தொடர்பு கொண்டு, ‘அன்னைக்கு பேசியது எதையும் மனசுல வெச்சிக்காதீங்க’ என்று சொன்னார். நான் அதைவிட சிரிச்சது இல்லை. ஏனெனில் அந்த சம்பவமே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவருக்கு நான் கோபமா இருக்கிறேன்னு நினைப்பு வந்திருக்கும். சினிஷ் ஒரு மிக வெளிப்படையாக பேசக்கூடிய நபர். அவர் சொல்ல வேண்டியது நேராகத்தான் சொல்வார். அதனாலே அவருக்கு நிறைய பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்படி வெளிப்படையாக பேசக்கூடிய சினிஷை நீங்கள் எப்படி கையாளப் போகிறீர்கள் என்பதுதான் பெரிய சவால்” என்று சிரிப்பை கிளப்பும் வகையில் உரையாற்றினார்.

சிவகார்த்திகேயன் கூறிய இந்த அனுபவம், ரசிகர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அவரது பயணத்தை மேலும் நெருக்கமாக உணரச் செய்தது. திரைப்படத் துறையில் தனது ஆரம்பகாலத்தில் சந்தித்த சவால்கள், இன்று அவர் எட்டியுள்ள உயரம், மற்றும் அதனிடையே இருந்த உறவுகளை வெளிப்படுத்தியது. அர்ஜூன் தாஸ் நடிக்கும் இந்த படம், தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட புதிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் கணிசமான அளவில் சூப்பர் ஹீரோ வகை படங்கள் குறைவான நிலையில், இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நிஞ்சா’ பைனலி பாரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘நிஞ்சா’ படத்தில் ஆக்ஷன் மற்றும் பாரம்பரிய கலையின் கலவையுடன் ஒரு புதிய உலகம் உருவாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதில் இந்திய கலையும் ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் தாக்கத்துடன் ஒரு கதையை உருவாக்கும் முயற்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் கருத்துக்கள் இயக்குநர் பா. இரஞ்சித் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மறுக்காமல் கொண்டுவரும் தயாரிப்பாளர்கள் அதிகம் தேவை என அவர் கூறினார். இயக்குநர் வெங்கட்பிரபு இளம் நடிகர்களும் புதிய கட்டமைப்பும் இணைந்து உருவாகும் இப்படங்கள் தொழில்துறைக்கு நல்ல ஊக்கமாக இருக்கும் என பாராட்டினார். நடிகர் ஆர்யா, அர்ஜூன் தாஸ் மற்றும் பைனலி பாரத் இருவருமே திறமையானவர்கள், அவர்களின் கேரியரில் இந்த இரண்டு படங்களும் முக்கியமானவை ஆகும் என உறுதியான பின்னணியுடன் பேசினார். விழாவின் இறுதியில், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் பற்றியும் தகவல் பகிரப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14-ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படியாக சினிஷின் Soldiers Factory நிறுவனம் முன்வைக்கும் இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவுக்கு புதிய சுவை சேர்க்கும் முயற்சி என சொல்லலாம். எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அர்ஜூன் தாஸ் மற்றும் பைனலி பாரத் ஆகியோரின் ரசிகர்களும் இந்த படங்கள் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் வழங்கிய வாழ்த்துகளும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா.. தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இடையே காதலாமே..? இப்படி ஒரு ஆதாரம் கிடைச்சிடுச்சே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share