×
 

சிவப்பு உடையில் "மோனிகா" பாடல் கதாநாயகிக்கே டஃப் கொடுத்த சிவாங்கி..! கலக்கல் போட்டோஸ் இதோ..!

மோனிகா பாடல் கதாநாயகிக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிவாங்கி கலக்கல் போட்டோஸ் உள்ளது.

பிரபல தனியார்  தொலைக்காட்சியின் "சூப்பர் சிங்கர் 7" மூலமாக பாடகியாக வந்தவர்,  அந்த நிகழ்ச்சியில் தனது குரலால் வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்து இருப்பதாகவும், 

இந்தக் குரலால் நான் நிறைய சந்தோஷங்களை இழந்துள்ளதாகவும் கூறி, பலரது அனுதாபங்களையும் பெற்று பின் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் தான் சிவாங்கி.

இதையும் படிங்க: யுவன் குரலை கேட்க ஆசையா..! இன்று மாலை வெளியாகிறது "மாரீசன்" படத்தின் 2வது பாடல்..!

அதன்பின், தமிழ் திரையுலகில், “பசங்க” என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான “அன்பாலே அழகாகும்” என்னும் பாடலை பாடி தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதுமட்டுமல்லாமல் தனக்கான யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அவர் போகும் இடமெல்லாம் வீ-லாக் செய்து லட்சக்கணக்கான பாலோவர்ஸ்களைப் பெற்றவர்.

இதனை அடுத்து "குக்கு வித் கோமாளி" என்னும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'டான்' திரைப்படத்தில் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு தருவதாக சிவாங்கியிடம் கூறியிருந்தார். 

அதே போல் அவரது படத்தில் நடிக்க வைத்தார்.  இந்த சூழலில், 2021ஆம் ஆண்டு  "சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருதும், 

தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருதும்,  பிரபல ஜோடிக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை இதுவரை பெற்றுள்ளார்.

இப்படி இருந்த சிவாங்கி, பல சினிமாவில் பல பாடல்களை பாடி வருவதோடு, 

தான் தனிமையில் இருக்கும் நேரத்தில் பொழுதை கழிப்பதற்காக பல இடங்களுக்கும் சென்று, 

அங்கு தான் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருவார். இந்த சூழலில், சிவாங்கி அவ்வப்போது தான் வாங்கும் புதிய ஆடைகளை அணிந்து அதில் போட்டோ சூட் நடத்துவது வழக்கம் 

அந்த வகையில் தற்பொழுது சிவப்பு கலர் உடையணிந்து கலக்கல் போட்டோ சூட் நடத்தியுள்ளார் சிவாங்கி.

இந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவிட ரசிகர்கள் சிவாங்கி கதாநாயகியாக நடிக்க இருப்பதால் தான் 

இந்த போட்டோ சூட்டை நடத்தி இருக்கார் போல என கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: இன்று மாலை வெளியாகிறது எஸ்.ஜே.சூர்யாவின் "கில்லர்" படத்தின் பர்ஸ்ட் லுக்...! குஷியில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share