வெள்ளை நிற சுடிதாரில்.. இளசுகளை மயக்கும் நடிகை சோபிதா துலிபாலா..!
நடிகை சோபிதா துலிபாலா வெள்ளை நிற சுடிதாரில் இளசுகளை மயக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா.
மாடலிங் உலகிலிருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து, பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை நிரூபித்த அவர், மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான முகமாக மாறினார்.
இதையும் படிங்க: ஜெயிலர் எல்லாம் ஒரு படமா.. பார்க்கவே சகிக்க முடியவில்லை..! இயக்குநர் ராஜகுமாரன் பேச்சால் டென்க்ஷனில் ரஜினி Fan's..!
அந்தப் படத்தில் அவரது நடிப்பு, தோற்றம் மற்றும் கண்ணியமான நடைக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றது.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு, சோபிதா துலிபாலாவின் ரசிகர்கள் வட்டம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.
அதே நேரத்தில், அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் தொடர்ந்து பிஸியாக இருந்து வந்தார்.
பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதன் மூலம், ஒரு வழக்கமான கமர்ஷியல் நடிகையை விட, திறமையை முன்னிலைப்படுத்தும் நடிகையாக அவர் தன்னை நிலைநாட்டிக் கொண்டார்.
இதனிடையே, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோபிதா துலிபாலா முக்கியமான முடிவை எடுத்தார். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிவப்பு நிற தாவணியில் உலா வரும் தேவதை..! அழகின் மொத்த உருவமாக மாறிய பிக் பாஸ் புகழ் ஜனனி..!