உங்களுக்கு அசிங்கமாகவே இல்லையா..! செல்போனில் 'மாமன்' படத்தை பாக்குறீங்க.. வெளுத்து வாங்கிய நடிகர் சூரி..!
செல்போனில் 'மாமன்' படத்தை பார்க்கிறவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகர் சூரி.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'மாமன்'. இந்த படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது படம் வெளியான அதே நேரத்தில் நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படமும் வெளியானதால் யாருடைய படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் கூறி கொண்டு இருக்க, தற்பொழுது பாக்ஸ் ஆபிசில் சந்தானத்தின் படத்தை விட, நடிகர் சூரியின் மாமன் படம் அதிக வசூலை பெற்றுள்ளது.
தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவை குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும், வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படம் உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்கு விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருக்கிறார்.
இதையும் படிங்க: பஞ்சமிக்காக தாய்மாமனாக மாறிய சூரி..! காது குத்தி அழகு பார்த்த ருசிகர சம்பவம்..!
ஆதலால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்ற தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்யூஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது. ஆனாலும் படத்தில் பாசங்கள் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றும் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. படத்தில் காமெடி என்பது துளி கூட இல்லை. சண்டைக் காட்சிகள் எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என ஒரு சில குறைகளை ரசிகர்கள் முன் வைத்து சென்றனர்.
இப்படி இருக்க, தாய்மாமன் பாசமிகு கதையாக பார்க்கப்படும் இப்படத்தை பார்த்து பலரும் கண்ணீர் வடித்து வரும் வேளையில், இப்படத்தை திரையில் காணாமல் செல்போனில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களை நினைத்து நடிகர் சூரி அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு கண்ணீர் வடித்துள்ளார். அந்த வகையில் அவரது பதிவில், " ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.
இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன. ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.
ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்… அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு ‘வியூ’க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.
எனவே என் பணிவான வேண்டுகோள்; திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என்ன பெத்தாரே.. முருகன் தந்தாரே..! ரசிகரை திட்டிய சூரி இப்ப எங்கு இருக்கிறார் பாருங்க..!