×
 

காலம் மாறுது பாஸ்.. அனிமேஷனுக்கு மாறுங்க..! சூப்பர் ஸ்டாரின் நெக்ஸ்ட் படத்திற்கு ஹிண்ட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

சௌந்தர்யா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாரின் நெக்ஸ்ட் அனிமேஷன் படத்திற்கு ஹிண்ட் கொடுத்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் என்ற அடையாளத்தோடு திரையுலகில் நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஆனால், தன் தந்தையின் புகழ் மணலில் மட்டும் நின்றுவிடாமல், தன்னுடைய திறமை மற்றும் உழைப்பால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி காட்டியவர். இன்று அவர் இயக்குநர், தயாரிப்பாளர், கிராபிக் டிசைனர் மற்றும் டிஜிட்டல் இனோவேஷன் நிபுணர் என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார்.

இப்படி இருக்க 2014-ம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ படம், சௌந்தர்யாவை தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அடையாளமாக மாற்றியது. ரஜினிகாந்த் – தீபிகா படுகோணே நடிப்பில் உருவான இந்த படம், இந்தியாவில் முதல் மோஷன் கேப்சர் அனிமேஷன் திரைப்படமாகும். அந்த காலகட்டத்தில் இப்படம் மிகுந்த தொழில்நுட்ப முயற்சியாகவும், தைரியமான முயற்சியாகவும் பார்க்கப்பட்டது. இந்த படம் வெளியான போது சில விமர்சனங்களும், தொழில்நுட்ப குறைகளும் பேசப்பட்டாலும், தமிழில் அனிமேஷன் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஒரு தொடக்கமாக கோச்சடையான் வரலாற்றில் இடம் பெற்றது. சௌந்தர்யா அந்த முயற்சியை ஒரு சோதனையாக அல்லாது, ஒரு புதிய சினிமா திசையை உருவாக்கும் முயற்சியாகவே பார்த்தார். அவர் பின்னர் நடிகர் தனுஷை வைத்து “வேலையில்லா பட்டதாரி 2” என்ற படத்தை இயக்கினார்.

அந்தப் படம் அவரை வர்த்தக ரீதியாகவும், தொழில்முறை ரீதியாகவும் மேலும் வலுப்படுத்தியது. சமீபத்தில் சௌந்தர்யா தனது சமூக வலைதள கணக்கில் ரசிகர்களுடன் Q&A (Question and Answer) நிகழ்வை நடத்தியிருந்தார். அதில் பலரும் அவரிடம் சினிமா, தொழில்நுட்பம், குடும்பம் போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் ஒருவரின் கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த ரசிகர், “முருகனின் ‘சூரசம்ஹாரம்’ குறித்து தமிழில் ஒரு அனிமேஷன் படம் எடுத்தால் எப்படி இருக்கும்? அது ஒரு பெரிய வெற்றியாக மாறும் என்று நம்புகிறேன். அதை நீங்கள் இயக்கலாமே?” என கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு சௌந்தர்யா அளித்த பதிலே தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: சமூகம் பெரிய இடம் போலயே..! இயக்குநருக்காக கையை வெட்ட துணிந்த நடிகை பிரியாமணியால் பரபரப்பு..!

அதற்கு சௌந்தர்யா ரஜினிகாந் மிகுந்த நம்பிக்கையுடன்,  “நீங்கள் கூறுவது மிகவும் உண்மை. அனிமேஷனுக்கு தற்போது அதற்கான அங்கீகாரம் இறுதியாகக் கிடைத்துவிட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறையருளால், இன்னும் பல அற்புதமான படங்கள் வர உள்ளது” என பதிலளித்துள்ளார். இந்த ஒரு வரிகளில் அவர் வெளிப்படுத்திய நம்பிக்கை, தமிழ் திரையுலகில் அனிமேஷன் மீண்டும் ஒரு புதிய உயிர் பெறும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் எப்போதும் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை நோக்கி செயல்படும் ஒருவராக கருதப்படுகிறார். கோச்சடையான் வெளியானபோது சௌந்தர்யா, “சினிமா ஒரு கலை, ஆனால் அதை முன்னேற்றுவது தொழில்நுட்பம் தான். தமிழ் சினிமா உலக அளவிலான தரத்தில் இருக்க வேண்டுமெனில், புதிய முயற்சிகளைச் செய்யும் தைரியம் அவசியம்” என்று இருந்தார். அவரது இந்த எண்ணமே இன்றும் பல புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு ஊக்கமாக திகழ்கிறது.

இப்போது அவர் கூறிய “இது ஆரம்பம் மட்டுமே” என்ற வாக்கியம், புதிய அனிமேஷன் படங்கள் தமிழில் உருவாகும் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பலரும் கருதுகின்றனர். தமிழகத்தின் கலாச்சாரத்தில் சூரசம்ஹாரம் என்பது வெறும் புராணக் கதை அல்ல, அது தெய்வீக வெற்றியின் சின்னம். இதனை அனிமேஷன் வடிவில் உருவாக்குவது ஒரு மிகப்பெரிய கலாச்சாரச் சாதனையாக இருக்கும். சௌந்தர்யா அதை இயக்கினால், அவரது தொழில்நுட்ப நுணுக்கமும் கலைநயமும் இணைந்து அந்தப் படத்தை ஒரு சர்வதேச தரத்தில் கொண்டு செல்லும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.  சௌந்தர்யாவின் இந்த பதிலுக்கு ரசிகர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். “தமிழ் சினிமாவுக்கு புதிய உயிர் கொடுப்பவர் இவர் தான்”, “அவளின் பார்வை மிகவும் முன்னோக்கியது”, “தமிழ் புராணங்களும் தொழில்நுட்பமும் இணையும் நாளை காண விரும்புகிறோம்” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சௌந்தர்யா தற்போது தனது நிறுவனமான “May 6 Entertainment” மூலமாக பல புதிய டிஜிட்டல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பெண்களை மையமாகக் கொண்ட வலைத் தொடர்களையும், குழந்தைகளுக்கான அனிமேஷன் கதைகளையும் தயாரிக்கும் முயற்சியில் உள்ளார். அதோடு, அவர் சமீபத்தில் “விமென் இன் டெக்” என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய திரைப்படங்களில் பெண்களின் பங்களிப்பு, தொழில்நுட்பம், மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து உரையாற்றினார்.

ஆகவே சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறிய ஒரு வரி, “இது ஒரு ஆரம்பம் மட்டுமே…” என்ற இந்த வாக்கியம் தமிழில் அனிமேஷன் கலைக்கு ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டது போல. தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் பாரம்பரிய கதைகளையும் இணைக்கும் அவரது கனவு, தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. 

இதையும் படிங்க: டேன்ஸிங்க் ரோஸாக மாறிய சிவகார்த்திகேயன்..! ஹைப்பை கிளப்பும் sk-வின் 'பராசக்தி' பட First Single ரிலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share