×
 

ஆனா இது புதுசா இருக்கு அண்ணே..! ஷாக்கான தமிழ் நடிகர்கள்.. சுமார் ரூ.4000 கோடி.. களமிறங்கும் ஜியோ ஹாட்ஸ்டார்..!

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழகத்துக்கு ரூ.4000 கோடி சினிமாவில் முதலீடு செய்வதாக மீட்டிங் போட்டு உறுதி செய்துள்ளனர்.

ஹாட்ஸ்டாரில் தற்போது பிக் பாஸ், விஜய் டிவி சீரியல்கள் உள்ளிட்ட பிரபலமான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தென்னிந்தியாவின் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய முதலீட்டை ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

மொத்தமாக 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தென்னிந்திய மொழிகளில் புதிய படங்கள், தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உருவாக்க உள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த முதலீட்டில் தமிழ் மொழிக்கு மட்டும் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொழில்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுடன் ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகள் அனைத்தும் நேற்று நடந்த "Jio Hotstar South Unbound" என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளின் முக்கிய கலைஞர்கள், அரசியல்வாதிகள், தயாரிப்பாளர்கள், ஓடிடி துறையின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த் திரைப்பட உலகின் பெருமை விஜய் சேதுபதி, நடிகர் உலா கமல் ஹாசன், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர். பிக் பாஸ் தெலுங்கு பதிப்பை தொகுத்து வழங்கும் நாகார்ஜூனா, மலையாள பதிப்பின் ஹோஸ்ட் மோகன்லால் ஆகியவர்களும் சிறப்பு அழைப்பினராக நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.  இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக ஹாட்ஸ்டாரின் தென்னிந்திய விரிவாக்கத்தையும், Jio உடன் இணைந்த புதிய திட்டங்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

இதையும் படிங்க: ஒரே போட்டோவில் ரசிகர்களை கவர்ந்த நடிகை பாக்யஸ்ரீ..! லுக் லைக் போட்டோஸ் இதோ..!

நிகழ்ச்சியில் மேடையேறும் ஒவ்வொரு பேச்சாளரும் தென்னிந்திய மொழிகளின் சக்தி, பார்வையாளர்களின் அளவு, ஓடிடிகள் எதிர்காலம் ஆகியவை பற்றி விரிவாக பேசியனர். ஹாட்ஸ்டாரின் அதிகாரிகள் தெரிவிகையில் “தென்னிந்திய மொழிகளில் உள்ள கதை சொல்லும் திறன் உலக தரத்தில் உள்ளது. இதை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் தான் இவ்வளவு பெரிய முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது” என்கின்றனர். தமிழ் மொழி மற்றும் தமிழகப் பார்வையாளர்கள் ஓடிடி துறையில் மிக வேகமாக வளர்ந்து வருவதால், ஹாட்ஸ்டார் இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது.

இந்தப் புதிய முதலீட்டின் மூலம், நூற்றுக்கணக்கான புதிய தமிழ் வலைத்தொடர்கள் தயாராகும். தமிழ் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-க்கு வாங்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் உயரும், புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் வெளிவர வாய்ப்பு அதிகரிக்கும். தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. தமிழ் படைப்பாளர்கள் சர்வதேச ஓடிடி சந்தையில் உயர்வதற்கான முக்கிய ‘பிளாட்ஃபாரம்’ இது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த MoU க்கு பிறகு, தமிழ் சந்தைக்காக 100–க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் பணியில் இருப்பதாக ஹாட்ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

அதில், கிரைம் த்ரில்லர் வலைத்தொடர்கள்,  பிரம்மாண்ட வரலாற்று தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள், ரொமான்ஸ், காமெடி, குடும்பத் தொடர்கள், பெரிய பட்ஜெட் ஸ்டார் நடிகர் தொடர்கள், ஓடிடி-க்காக நேரடியாக தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள்.. தகவல்படி, தமிழ் சினிமாவின் சில முன்னணி இயக்குநர்களும் ஹாட்ஸ்டாருடன் ஏற்கனவே உடன்படிக்கைகள் செய்து விட்டனர். விஜய் சேதுபதி மேடையில், “தமிழ் உள்ளடக்கத்தை சர்வதேச தரத்தில் கொண்டு செல்லும் பெரிய முயற்சி இது. படைப்பாளர்களுக்கு இது பொற்காலம்” என்று பேசியுள்ளார். அடுத்து கமல் ஹாசன் தளங்களின் எதிர்காலம் குறித்து, “நல்ல கதைகள் எப்போதும் தங்கள் வழியைத் தேடி செல்லும். ஓடிடி ஆனது அந்த கதைகளுக்கு புதிய உலகத்தைத் தந்துள்ளது” என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் படைப்பாற்றலை உலகுக்கு கொண்டு செல்லும் இந்த ஒப்பந்தம் பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். நாகார்ஜூனா & மோகன்லால், பிக் பாஸ் தெலுங்கு மற்றும் மலையாள பதிப்புகளின் ஹோஸ்ட்களாக இருக்கும் இருவரும் OTT வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். தென்னிந்திய பார்வையாளர்கள் ஓடிடி வளர்ச்சியை மிக வேகமாக ஆதரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளடக்க தேவைகள் பெருகியுள்ளன. இந்தியாவில் ஓடிடியின் 40% பார்வையாளர்கள் தென்னிந்தியாவில் உள்ளனர். உலகளவில் தென்னிந்திய படங்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் இன்டர்நெட் பயனர்கள் தென்னிந்தியாவில்தான் இந்த காரணங்களால் ஹாட்ஸ்டார் தனது வருங்கால வளர்ச்சியை முழுமையாக தென்னிந்தியாவில்தான் மையப்படுத்தி உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில், தென்னிந்தியாவில் 20,000+ வேலை வாய்ப்புகள் உருவாகும். வருடத்திற்கு குறைந்தது 100+ புதிய வலைத்தொடர்கள் வெளியாகும். தமிழ் ஓடிடி சந்தை இந்தியாவில் முதலிடத்தை நோக்கும். வெளிநாட்டு சந்தைகளில் தமிழ் உள்ளடக்கத்திற்கு பெரிய தேவை உருவாகும். தமிழ் சினிமா மற்றும் ஓடிடி இணைந்து உலக சந்தையை பிடிக்கும். பிக் பாஸ் தளம் தென்னிந்தியாவின் பெரிய பொழுதுபோக்கு ‘IP’ ஆக இருப்பதால், அனைத்து மொழிகளின் ஹோஸ்ட்களையும் ஒன்றாக மேடையில் காண்பது ரசிகர்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இதுவும் ஹாட்ஸ்டார் தென்னிந்திய தளத்தை எவ்வளவு முக்கியமாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கான சான்று. ஓடிடி துறையிலேயே மிகப்பெரிய முதலீட்டு அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. இது தென்னிந்தியாவின் படைப்பு துறையை உலகளவில் உயர்த்தும். தமிழ் உலகத்திற்கு புதிய பொற்காலம் வந்து விட்டது என்று பல திரைப்பட வட்டாரங்கள் இதை வரவேற்று உள்ளன.

இதையும் படிங்க: இது என்னடா.. ரூ.100 கோடி ஹீரோவுக்கு வந்த சோதனை..! மீண்டும் தள்ளிப்போகும் LIK பட வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share