×
 

கவர்ச்சியில் துளிகூட இரக்கம் காட்டாத நடிகை.. சீதை வேடத்தில் நடிப்பதா..! பொங்கி எழும் நெட்டிசன்களால் பரபரப்பு..!

சீதை வேடத்தில் நடிக்கும் கவர்ச்சி நடிகை அஞ்சலி அரோராவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இளம் நடிகை அஞ்சலி அரோரா, தற்போது ஒரு புதிய சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார். “கச்சா பாதம்” பாடலுக்காக இணையத்தில் புகழ்பெற்ற இவரை இப்போது “ஸ்ரீ ராமாயண கதை” என்ற புதிய படத்தில் சீதா தேவியாக நடிக்கவுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு சாதாரண காஸ்டிங் அறிவிப்பாக இல்லை.. இந்திய சமூக வலைதளங்கள் முழுவதும் இதே ஒரு விவகாரத்தையே இன்று பேசிக் கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்க இன்ஸ்டாகிராமில் 1.32 கோடி பின்தொடர்வோரை கொண்டிருக்கும் அஞ்சலி அரோரா, சில ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் மிகுந்த புகழ் பெற்றவர். அவரின் நடன வீடியோக்கள், குறிப்பாக “கச்சா பாதம்” பாடலுக்கு ஆடிய நடனம், இணையத்தில் பில்லியன் பார்வைகளைப் பெற்றது. அந்த வீடியோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே, “கச்சா பாதம் கேர்ள்” என்ற பெயரில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனார். இளம் தலைமுறையினர் மத்தியில் அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டம் உருவானது. அஞ்சலி, பின்னர் பல ஹிந்தி இசை வீடியோக்களில், மற்றும் சில ஓடிடி  வெப் சீரிஸ்களில் நடித்தார். அவரின் தைரியமான புகைப்படங்கள் மற்றும் உடைத் தேர்வுகள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வந்தன. இப்போது, ரஜ்னீஷ் டுகால் மற்றும் நிர்பய் வாத்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் “ஸ்ரீ ராமாயண கதை” என்ற திரைப்படத்தில் அஞ்சலி அரோரா சீதா தேவி வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு குழு, சமீபத்தில் ஒரு ப்ரோமோஷனல் புகைப்படத்தை வெளியிட்டது. அதில் அஞ்சலி பாரம்பரிய உடையில், ராமாயணத்தின் சீதா போல அலங்கரிக்கப்பட்டிருந்தார். இந்த தகவல் வெளியானவுடன், சமூக வலைதளங்கள் முழுவதும் தீப்பிடித்தது போல சர்ச்சை வெடித்தது. அஞ்சலியின் இந்த புதிய வேடம் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம்.. இவர் இதற்கு முன் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் பாடல் நடன வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். இதையடுத்து பலர் சமூக ஊடகங்களில். “இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோவில் நடனமாடும் ஒருவரை, புனிதமான சீதா வேடத்தில் பார்க்க முடியுமா?” என கேள்வி எழுப்பினர். பல மதபோராட்டக்காரர்கள் மற்றும் ராமாயண ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். சிலர் இதை “இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் முயற்சி” என குற்றம் சாட்டினர். ஒரு பயனர்,  “இது கலியுகத்தின் உச்சநிலை.. புனிதமான கதாபாத்திரங்கள் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன.” எனவும் மற்றொருவர்,  “சீதா மாதாவை காட்சிப்படுத்தும் நடிகை குறைந்தது அந்தப் பாத்திரத்தின் மதிப்பை அறிந்திருக்க வேண்டும்” என்கின்றனர்.

இதையும் படிங்க: 24மணி நேரம் டைம்.. மன்னிப்பு கேட்கல விபரீதமாகிடும்..! மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் பறந்த நோட்டீஸ்..!

இருப்பினும், அனைவரும் எதிர்ப்பை மட்டுமே தெரிவித்தது இல்லை. சிலர் அஞ்சலிக்காக குரல் கொடுத்தனர். படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில், அஞ்சலி சிவப்பு மற்றும் பொன் நிற பாரம்பரிய சேலையில், தலையில் பூமாலை, கையில் பூஜை தாமரை உடன் போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களுக்குள் இன்ஸ்டாகிராமில் 3.3 லட்சம் லைக்குகள் பெற்றது. ஆனால் அதே நேரத்தில், அந்தப் பதிவின் கீழ் ஆயிரக்கணக்கான எதிர்மறை கருத்துகள் வந்தன. இந்த எதிர்ப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பட தயாரிப்பு குழு ஒரு விளக்கக் குறிப்பு வெளியிட்டது. அதில் அவர்கள், “அஞ்சலி அரோரா ஒரு திறமையான நடிகை. அவர் சீதா வேடத்தை மிகுந்த மரியாதையுடன் அணுகியுள்ளார். ராமாயணத்தின் உண்மையான மதிப்பையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் விதமாகவே படம் உருவாக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளால் படத்தின் நோக்கம் மாறாகப் போகிறது. இது ஒரு ஆன்மீக திரைப்படம். எந்த மத உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எங்களிடம் இல்லை” என்றனர். இப்படியாக சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை பார்த்த பிறகு, அஞ்சலி அரோரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு குறுகிய பதிவு வெளியிட்டார். அதில் அவர்,  “நான் ஒரு கலைஞர். ஒவ்வொரு வேடத்தையும் மரியாதையுடன் அணுகுவேன். நான் சீதா மாதாவைப் பற்றிய அன்பும் மதிப்பும் கொண்டிருக்கிறேன்.

மக்கள் படத்தை பார்த்த பிறகே என்னை மதிப்பிடுங்கள்” என்றார். இந்த பதிவுக்கு பிறகு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான விமர்சனங்கள் இன்னும் தொடர்கின்றன. சில மத அமைப்புகள் இதற்கு எதிராக மத்திய சென்சார் வாரியத்திடம் புகார் அளிக்கத் தயாராகி வருவதாகவும், “இப்படம் வெளியாகும் முன் கதாபாத்திரத் தேர்வு மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தற்போது ஒரு பெரிய சமூக விவாதமாக மாறியுள்ளது.. “ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உடைத் தேர்வு, அவர் புனித கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியற்றவளாக ஆக்குகிறதா?” என  பல பெண் நடிகைகள் இதை ஆதரித்து குரல் கொடுத்துள்ளனர். “ஸ்ரீ ராமாயண கதை” திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இயக்குனர் தெரிவித்ததன்படி, படம் 2026 ஆரம்பத்தில் பான்இண்டியா ரிலீஸாக வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆகவே அஞ்சலி அரோரா நடிக்கவுள்ள சீதா வேடம் இப்போது இந்திய சமூக வலைதளங்களில் மிகப்பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஒரு பக்கம், “புனிதமான பாத்திரம் களங்கப்படுத்தப்படுகிறது” என்ற எதிர்ப்பு, மறுபக்கம், “நடிகைக்கு வேடத் தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்க வேண்டும்” என்ற ஆதரவு. என இவை அனைத்துக்கும் நடுவில், அஞ்சலி அரோரா கூறிய ஒரு வரி மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதுதான் “படத்தை பார்த்த பிறகே என்னை மதிப்பிடுங்கள்” என்பது தான். அந்தப் படம் வெளிவரும் வரை இந்த சர்ச்சை அடங்குமா என்பது தற்போது ரசிகர்களிடையே பெரிய கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: சும்மா இல்ல.. நெருக்கமான காட்சியில் எனக்கு அந்தமாதிரி ஆகிடிச்சி தெரியுமா..! நடிகர் ஆதித்யா மாதவன் ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share