×
 

இனிதான் அரங்கம் அதிரும்.. ஆட்டம் சூடுபிடிக்கும்..! தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சுரேஷ் ரெய்னா..!

சினிமாவில் தளபதி விஜயின் இடத்தை பிடிக்க கதாநாயகனாக வருகிறார் சுரேஷ் ரெய்னா.

பொதுவாக திரைப்படங்கள் என்றாலே அதில் பல கலவையான விஷயங்கள் இருக்கும். காதல், காமம், போட்டி, பொறாமை, துரோகம், பழிவாங்குதல், கொலை, கொள்ளை என பல கான்செப்டுகளில் இன்று படங்களை எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள். இப்படிப்பட்ட படங்களும் திரையுலகில் மிகப்பெரிய சாதனையை படைத்த வருகிறது. 

இருப்பினும் விளையாட்டுக்களை குறித்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு எப்பொழுதும் இங்கு அதிகமான மவுசு இருக்கத்தான் செய்கிறது. கபடி, கிரிக்கெட், வாலிபால், ஃபுட்பால், ஹாக்கி, மாரத்தான் என விளையாட்டுகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள் எடுத்தாலும் அத்தனை படங்களும் இங்கு அதிகமான வசூலை ஈட்டி வருகிறது. அதிலும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை படமாக எடுத்தால் அதனை ரசிக்க ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்து ரிலீஸ் செய்த போது அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கண்கவரும் அழகில் குடும்பஸ்தன் பட நடிகை..! இணையத்தில் ட்ரெண்டாகும் கிளிக்ஸ்..!

இப்படி இருக்க கிரிக்கெட் வீரர்களின் கதைகளை வேறொருவரை வைத்து எடுப்பதை விட அதே வீரரை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? அதே போல் தான் தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது... ஃபுட்பாலில் கிங் ஆக இருக்கும் ரொனால்டோ-வை படத்தில் நடிக்க வைக்க முடியுமா? என்று தெரியாது ஆனால் ரசிகர்களால் அன்புடன் சின்ன தல என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவை சினிமா பக்கம் இழுக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து முழு ஓய்வை எடுத்தார்.  இந்தியன் பிரீமியர் லீக்-ன் மிக முக்கியமானவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் தானும் ஓய்வு பெறுவதாக அதிரடி அறிவிப்பை கொடுத்தவர். இப்படி கிரிக்கெட்டில் தன்னை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்ட சுரேஷ் ரெய்னா உத்தரப் பிரதேசத்தின் முராத் நகரில் 1986-ம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்தார். 

இவரது சாதனைகள் என பார்த்தால், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6000 முதல் 8000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை உடையவர்.. மேலும் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 5000 நன்களை எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.. அதே போலத்தான் ஐபிஎல்-லில் 107 முறை அதிக கேட்சிகளை பிடித்தவர் என்ற பெருமையும் உடையவர்... குறிப்பாக பவர் பிளேவில் கூட அதிக ரன்களை எடுத்து சாதனை படைத்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரரும் இவரே ஆவார்.

இந்த சூழலில், கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்று நிம்மதியாக வாழ்ந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்பொழுது சினிமாவில் நுழைந்துள்ளார். அதன்படி, டிரீம் நைட் ஸ்டோரிஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் டி.சரவணகுமார் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சுரேஷ் ரெய்னா. இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, " சும்மா சொல்லக்கூடாது... உண்மையில் தமிழ்நாட்டில் தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு நான் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் மக்களின் அன்பும் பேராதரவும் எனக்கு அதிகமாக கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் எனக்கு மிகவும் பிடித்த இடம். குறிப்பாக இங்கு உள்ள சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தின் மீது கொண்ட பாசத்தால் தான் தமிழில் நடிக்கிறேன். இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்” என மகிழ்ச்சியுடன் பேசி சென்றார்.

இதனை பார்த்த சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் கிரிக்கெட்டில் சிக்ஸர் கொடுப்பது போல எங்கள் அண்ணன் சினிமாவிலும் சிக்ஸர் கொடுப்பார் என சொல்லி அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓ.. இதுதான் விஷயமா.. மகிழ்ச்சியில் ஜனநாயகன் படத்தின் ரகசியத்தை உடைத்த நடிகை பிரியாமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share