'குடும்ப படம் எடுப்பது மிகவும் சவாலான ஒன்று' – இயக்குநர் பாண்டிராஜ் அட்டகாசமான பேச்சு..!
‘தலைவன் தலைவி’ இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியது வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் குடும்பம் மற்றும் உணர்ச்சி சார்ந்த திரைப்படங்களை மிகவும் திறம்பட இயக்குவதில் பெயர் பெற்றவர் என்றால் அவர்தான் இயக்குநர் பாண்டிராஜ். இப்படி, சிறுவயது கதைகளில் தொடங்கி, பசுமை சூழலோடு பழமையான குடும்ப பிணைப்புகளை வலியுறுத்தும் படங்களைச் சொல்கிற பாண்டிராஜ், தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்த ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை அட்டகாசமாக இயக்கியுள்ளார். இந்தப் படம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் ஆகியோரின் ஜோடியில் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதி உலகமெங்கும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், குடும்ப ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை இப்படம் உருவாக்கி உள்ளது என்று சொல்லலாம்.
இப்படி இருக்க, சமீபத்தில் நடைபெற்ற ‘தலைவன் தலைவி’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாண்டிராஜ், இத்திரைப்படம் குறித்த தனது அனுபவங்களையும், குடும்ப திரைப்படங்களை உருவாக்கும் சவால்களையும் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “ தற்பொழுது உள்ள காலகட்டத்தில் குடும்ப படம் எடுப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. குடும்ப படம் என்றாலே நம்ம வாழ்க்கையைக் காட்டும் படம். ஆனால் பலர் அதைக் கேள்வியாய் பார்க்கிறார்கள். 'சீரியல் மாதிரி இருக்குமே', 'அதெல்லாம் கிரிஞ்' என்று சொல்லிவிடுகிறார்கள். கொஞ்சம் லேசாக விட்டாலும் படம் சீரியலாக மாரிவிடும். அதுவும் உண்மைதான். அதனால்தான் குடும்ப படம் எடுப்பது சவாலானது என்கிறேன். மேலும், கடைகுட்டி சிங்கம் படம் நன்றாக ஓடின உடன், சிவகார்த்திகேயன் என்னை நேரில் வந்து சந்தித்து, ‘அண்ணே, இப்படி ஒரு குடும்ப படம் எனக்கும் பண்ணி குடுங்க’ என்றார். அதனால் தான் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படமே உருவானது. மக்கள் குடும்பக் கதைகளை விரும்ப ஆரம்பித்தார்கள்.
அதன் தொடர்ச்சியாகவே இப்போது லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, மாமன் போன்ற படங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னை தேடிவரும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என எல்லோரும் தற்போது குடும்ப கதைகளைத் தான் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதனை நான் ஒருபொழுதும் நிராகரிக்கவில்லை. அதேபோல் தான் 'தலைவன் தலைவி' படம் எல்லோருக்குமான மிகவும் பிடித்த படமாக இருக்கும்" என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, பாண்டிராஜ் போன்ற இயக்குநர்களுக்குள் இருக்கும் உண்மையான கலைபாசத்தை வெளிபடுத்துவதாக உள்ளது. இன்று, ஒரே சூழ்நிலையில் அடிக்கடி சண்டை மற்றும் அதிரடி ஹீரோயிசம் காட்சிகள் நிரம்பிய படங்களை முன்னிலைப்படுத்தும் இந்த காலகட்டத்தில், மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளை வெளிக் கொண்டுவரும் குடும்பப்படங்கள் குறைவாகவே உருவாகின்றன. இது, தமிழ் சினிமா துறையில் நடிகர்களின் பார்வை மாற்றத்தையும், ரசிகர்களின் வரவேற்பு மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணியில் ‘தலைவன் தலைவி’..! தெலுங்கில் படத்தின் பெயர் என்ன தெரியுமா..?
ஒரே மாதிரியான ஹீரோயிசம் சார்ந்த கதைகளிலிருந்து விலகி, குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படங்களுக்கும் தற்பொழுது எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கியுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த நிலையில், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் பற்றிய தகவல்களின்படி, இது தாம்பத்ய உறவுகள், தலைமுறை வேறுபாடுகள், பெண்கள் வாழ்க்கையின் சவால்கள், சமூக பார்வையில் மாற்றம் போன்ற கதை அம்சங்களை தெளிவாக சொல்லும் குடும்ப கதையாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, தனது இயல்பான நடிப்புத்திறன் மூலம், மிக நெருக்கமான குடும்ப நாயகனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரைப்போலவே நடிகை நித்யா மேனன் இப்படத்தில் கணவன்-மனைவி உறவின் உண்மையான பரிமாணங்களை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறாராம். ஆகவே, குடும்பம் பற்றிய கதைகள் எளிதாக தெரிந்தாலும், உண்மையில் எழுதுவதும் இயக்குவதும் மிகவும் சவாலானது. தற்போதைய திரையுலகத்தில் சண்டை காட்சிகள், மாஸ் ஹீரோயிசம், வலியுறுத்தப்பட்ட காதல் போன்ற படங்களின் மத்தியில், உண்மையான மனித உறவுகள் பேசும் நல்ல குடும்ப படங்களும் தேவைப்படத்தான் செய்கிறது.
‘தலைவன் தலைவி’ இப்படிப்பட்ட தேவைக்கான பதிலாக தான் உருவாகி இருக்கிறது. அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து இப்படம் வெற்றி பெற்றால், அது மற்ற ஹீரோக்களையும் இயக்குநர்களையும் கொண்டு செல்லும் என இயக்குநர் பாக்கியராஜ் நம்பிக்கை தெரிவித்ததை போலவே மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கணவன் கண்முன்னே நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை..! கணவனின் ரியாக்ஷனால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!