ஐட்டம் டேன்ஸுக்கு குஷ்பூ தான் வேணுமா..! ரஜினி போட்ட கண்டீஷனால் தான் சுந்தர்.சி விலகல்..ஆ..?
ஐட்டம் டேன்ஸுக்கு குஷ்பூ தான் வேணும் என ரஜினி சொன்னதாக ஒருவர் போட்ட பதிவுக்கு குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமா உலகில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு வியப்பூட்டும் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 173” படத்தில் இயக்குநர் சுந்தர் சி. தன்னுடைய இடத்தை விலகியுள்ளதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த மாதம் விண்வெளி நாயகன் கமல் ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை நான் இயக்குகிறேன், நானும், இன்பன் உதயநிதியும் சேர்ந்து தயாரிக்கிறோம்” என்று கூறியிருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகும்போது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, சுந்தர் சி. வெளியிட்ட செய்தியால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சுந்தர் சி. “தலைவர் 173” படத்திலிருந்து நான் விலகியுள்ளேன்” என்று கூறிய அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் நம்ப முடியாமல், அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர். இப்படி முக்கியமான பட வாய்ப்பில் இருந்து இயக்குனர் விலகுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் சமூக வலைத்தளங்களில் கலவரம் ஏற்பட்டது. சிலர் இந்த சம்பவத்தில் சம்மந்தமே இல்லாமல் நடிகை குஷ்பு-வை வம்புக்கு இழுத்துள்ளனர். குறிப்பாக “அவர் காரணமாக சுந்தர் சி. இந்த படத்திலிருந்து விலகிவிட்டார்” என்று பேச ஆரம்பித்தனர். அதே சமயம், சிலர் மீம்ஸ் உருவாக்கி குஷ்புவைச் கேலி செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக ஒருவர், 'சூப்பர் ஸ்டார் ரஜினி ஐட்டம் பாட்டுக்கு குஷ்பு வேண்டும் என கேட்டிருப்பாரோ' என்று ட்வீட் செய்தார். இதில் ரஜினி போல இருக்கும் ஒருவரின் புகைப்படத்தையும் சேர்த்திருந்தார். இதை பார்த்த குஷ்பு, “இல்லப்பா உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நெனச்சோம்” என்று பதிலடி கொடுத்தார். இந்த பதிலை பார்த்த அந்த நபர், “எங்க வீட்ல யாரும் ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டாங்க மேடம்” என்று கூறி, குஷ்புவின் பதிலை தடுமாறச் செய்தார். இதை பார்த்த ரசிகர்கள், “ஒரு பெண்ணிடம் இப்படித் தான் மோசமாக பேசுவதா?” என்று ஆன்லைனில் பரபரப்பாக கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: படத்துல 'ஈகோ' இல்லப்பா.. ஈகோ-வால தான் படமே..! தியேட்டருக்குள்ள ஒரு ஷூட்டிங் அனுபவம் - 'காந்தா' விமர்சனம்..!
அவர்கள் முகத்தை மறைத்து, இணையத்தில் இதுபோன்று தைரியமாக பெண்களை இழிவுபடுத்த கூடாது எனவும் கூறினர். இந்த சம்பவம் வெளியாக, ரசிகர்கள் சுந்தர் சி. ஏன்? இப்படியான முடிவை எடுத்தார் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதே சமயம், இந்த வாய்ப்பு அடுத்ததாக யாருக்கு செல்லும் என்பதும் பரபரப்பான பேச்சு பொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழ்நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் சுந்தர் சி.க்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பரவிய மீம்ஸ் மற்றும் ட்வீட்கள், இந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகின்றன. குஷ்பு தனது பதில்களை தைரியமாக வெளியிட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரும் நாட்களில் சுந்தர் சி, தனது விலகளுக்காக காரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கங்கள் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர், தலைவர் 173 படத்தின் தயாரிப்பு அடுத்து எங்கு செல்கிறது, புதிய இயக்குநர் யார், முன்னணி நடிகர்கள் யாராக இருப்பார்கள் என்பது ரசிகர்களின் பிரதான கேள்வியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: "கும்கி 2" படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை..!! கிரீன் சிக்னல் காட்டிய சென்னை ஐகோர்ட்..!!