'அமரன்' படம் நினைவிருக்கா.. இது நெக்ஸ்ட் வர்ஷன்..! வெள்ளித்திரையில் "ஆபரேஷன் சிந்தூர்" முரளி நாயக்கின் பையோ பிக்..!
ஆபரேஷன் சிந்தூர் முரளி நாயக்கின் பையோ பிக் படமாக்கப்பட போகிறதாம்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் வீரர்கள் நம்மை பாதுகாக்க தங்களது உயிரையும் பணையம் வைக்கின்றனர். அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் நினைவூட்டும் வகையில் தற்போது உருவாகி வரும் ஒரு பான் இந்தியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படம், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய மிக முக்கியமான ராணுவ நடவடிக்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் வீரமரணம் அடைந்த 22 வயதான இந்திய ராணுவ வீரர் 'முரளி நாயக்' என்பவரின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை கதையாகக் கொண்டு செல்லும் வகையில் திரைப்படம் உருவாகிறது.
இந்த படத்தில் முரளி நாயக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிக் பாஸ் புகழ் நடிகர் கவுதம் கிருஷ்ணா. தமிழ் ரசிகர்களிடையே வலிமையான இடத்தை பெற்றுள்ள இவர், உண்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது கரியரில் ஒரு முக்கியமான திருப்பமாகும். பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கவுதம் கிருஷ்ணா, “இந்திய மக்கள் அனைவருக்கும் புகழ்ச்சியாக இருக்கும் ஒரு வீரனின் கதையை உலகுக்கு சொல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு பெரும் மரியாதை. முரளி நாயக்கின் வாழ்க்கை சித்திரிக்கும் இந்தப் படத்தில் நடிப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும்” எனத் தெரிவித்தார். மேலும் கூறுகையில், “இது வெறும் திரைப்படமல்ல. இது ஒரு பெரும் பற்று மற்றும் பொறுப்புடன் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் சிந்தித்து செயல் படவேண்டிய படம்” என்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து முக்கிய இந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம், உண்மையான வீரத்தின் கதையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் உருவாகிறது. இதன்மூலம் அனைத்து மாநிலங்களிலுமிருந்து வரும் பார்வையாளர்கள், முரளி நாயக்கின் தியாகத்தை உணர முடியும் என்பதே தயாரிப்பாளர்களின் நோக்கம். இந்தப் படத்தை விஷான் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் கே. சுரேஷ் பாபு மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “இப்படம் வெறும் வீரம் மட்டுமல்ல, வீரனின் குடும்பம், மனநிலை, சமூகத்தைப் பற்றிய பார்வை போன்ற பல பரிமாணங்களை வலியுறுத்தும்” என்று தெரிவித்தார். மேலும், இது முழுமையாக உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகும் என்பதையும், எந்தவிதமான மலிவான டிராமாவும் இல்லாமல், உண்மையை மரியாதையுடன் காட்சிபடுத்தவேண்டும் என்பது குழுவின் நோக்கம் என அவர் கூறினார். குறிப்பாக முரளி நாயக், 22 வயதானவர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையில் பங்கேற்றார்.
அந்த ஆபரேஷனில் அவர் காட்டிய தைரியம் மற்றும் தியாகம், இந்திய ராணுவத்தில் மட்டுமின்றி, நாட்டின் மனதிலும் நிலைத்துவிட்டது. அவர் வீரமரணம் அடைந்தபோதும், அவரது பண்பாடும், துணிவும் அவரது தோழர்களிடையே சின்னமாகவே நிலைத்துள்ளது. இவரின் வாழ்க்கையை படமாக்குவது, அவரது நினைவாகவும், இந்தியா என்னும் தேசத்தின் வீர வரலாற்றில் ஒரு பக்கமாகவும் அமையக்கூடியது. இந்தப் படத்தின் அறிவிப்பு நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்றது. இதில் திரைப்படக் குழுவினர், தயாரிப்பாளர்கள், நடிப்புப் பிரிவினர் மற்றும் ஊடகங்கள் பங்கேற்றனர். அந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட முதல் லுக் போஸ்டர், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதில், இந்திய ராணுவ உணர்வுள்ள ஒரு வீரரின் தோற்றத்தில் கவுதம் கிருஷ்ணா வரையப்பட்டிருந்தார். பின்னணியில் நாட்டுப்பற்றை ஊட்டும் தேசியக்கொடி, ராணுவ ஹெலிகாப்டர்கள், மற்றும் வெறித்தனமான போர்க்கள காட்சிகள், படம் ஒரு உண்மை வீரத்தின் கதை என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: லைஃப் டைம் செட்டில்மண்ட்டுக்கு தயாராகும் ஐஸ்வர்யா லட்சுமி..! அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்-ல..!
அதற்கான தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு சிக்கிம் மற்றும் லடாக் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, தேசிய அளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்படும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது ஒரு சினிமா அல்ல – உண்மை வீரனுக்கான மரியாதை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகேவ "ஆபரேஷன் சிந்தூர்" என்ற தலைப்பில் உருவாகும் இந்த பான் இந்தியா திரைப்படம், தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் இந்திய ராணுவத்தின் துணிச்சலை, மற்றும் அந்த வீரர்களின் குடும்பங்களின் மனநிலை, தியாக உணர்வை உணர்த்தும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சினிமா மட்டுமல்ல, இது நாட்டுப்பற்றும், வீரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மாற்றுத் தூதராக அமையக்கூடிய திரைப்படமாக உருவாகிறது.
இதையும் படிங்க: பயமா இருக்கா இனி பயங்கரமா இருக்கும்..! பதறவைக்கும் ராஷ்மிக்கா மந்தனாவின் "தாமா" ஹாரர் மூவி டீசர்..!