×
 

வரதட்சணை எதுக்காக கொடுக்கனும்..பெண் விருப்பப்பட்டால் தான் திருமணமே..! நடிகை பாமா அதிரடி பேச்சு..!

நடிகை பாமா, வரதட்சணை எதுக்காக கொடுக்கனும்..பெண் விருப்பப்பட்டால் தான் திருமணம் என ஆவேசமாக பேசியிருக்கிறார். 

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை கொடுமைகள் குறித்து ஒருவர் அளித்துள்ள நேர்மையான மற்றும் உருக்கமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்றும் சில பகுதிகளில் நிலவும் வரதட்சணை கொடுமைகள், அது மூலம் பெண்கள் அனுபவிக்கும் மனநல, உடல்நல சிதறல்கள், குடும்ப பிணைப்பு முறைகள் போன்றவை குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். "திருமணம் என்பது இரண்டு உயிர்களின் இணைப்பு,  அதில் ஒருவர் மட்டும் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும்" என நடிகை பாமா வெளிப்படியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்படி அவர் பேசுகையில், "குடும்பம் என்பது ஒருவருக்கான விஷயமல்ல. அது ஆண், பெண் இருவருக்கும் தேவையான அமைப்பு. அப்படி இருக்க, திருமணத்திற்கு பெண் வீட்டாரே ஏன் பணம் கொடுத்து, ஆணின் மனநிலை, குடும்பம், தேவைகளை சுமந்து செல்ல வேண்டும்?" என கேள்வி எழுப்பியதோடு மட்டுமின்றி, சட்டப்படி வரதட்சணை தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும், அதன் பிறகும் குடும்பப்பற்று என்ற பெயர்களில் பெண்கள் இன்னும் தோண்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இந்த பேட்டியில் அவர் பெண்களின் அறிவு வளர்ச்சிக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், "பெண்கள் நன்றாக படித்து, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். படிக்க இயலாதவர்களுக்கு வேண்டுமானால் உடல் உழைப்புக்கேற்ற வேலை இருந்தால் கூட அதனை மனப்பூர்வமாக செய்யத் தயாராக இருக்க வேண்டும். இது ஒரு பெண் குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் சுயநிலை பெற்ற நபராக உருவாகவும், தன்னை முழுமையாக உணரவும் வழி வகுக்கும்.. மேலும் பெண்கள் விரும்பினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு பின்பும், அவர்களின் சம்பாதிப்பு, சொத்து, வருமானம் என அனைத்தும் அவர்களது தனிப்பட்ட நலனுக்காகவே இருக்க வேண்டும்.. ஒரு பெண் கிச்சனுக்குள் மட்டுமே அடைத்துக் கொள்ளப்படக்கூடாது. அவளது திறமைகள், கனவுகள் அனைத்தும் வெளிவர வழி அளிக்க வேண்டும்.. கணவர் தோல்வியடையும் போது, அவரை நம்பி வாழ்ந்து வந்த துணை தவிர வேறு யார் ஆதரிக்க வருவார்கள்?.. இப்படி பேசுவதால் நான் ஆண்களுக்கு எதிரானவள் இல்லை. ஆனால் பெண்கள் எதிர்கொளும் வலிகள், பிணைப்பு, சுயாதீனத் தட்டுப்பாடுகள் குறித்து பேச வேண்டிய நேரமிது" என ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார். இப்படி இருக்க திருமணத்தின் பின்னர் பல பெண்கள் சமைத்தல், வீடு பராமரித்தல், குழந்தைகளை கவனித்தல் என்பவற்றில் மட்டுமே தங்களை அடைத்து வைப்பதை அவர் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்.. மேலும் திருமண வாழ்வில், தோல்வி, மன அழுத்தம், வாழ்க்கை ஏமாற்றங்கள் போன்ற சிக்கல்கள் உருவாகும் போது, கணவருக்கு நம்பிக்கையாய்த் துணையாக இருப்பது ஒரு சகோதரியாக, நண்பராக, வாழ்க்கைத்துணையாக ஒரு பெண் அந்த நேரத்தில் சக்தியாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய ராப் பாடகர் வேடன் மீது லுக் அவுட் நோட்டீஸ்..! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

அதுமட்டுமல்லாமல் இவ்வாறு பேசியபோதும், அவர் ஆண்களை குற்றம்சாட்டல்லை என்றும், இது ஒரு சமூக ஒத்துழைப்பால் தீர வேண்டிய பிரச்சனை என்றும் தெளிவாக கூறினார்.. இந்நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக, இன்றைய பெண் தனது வாழ்வை எப்படி தீர்மானிக்க வேண்டும், குடும்பம், திருமணம், கல்வி, வேலை, சொத்துரிமை போன்றவற்றில் சுதந்திரமான குரலுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த பேட்டி, பெண்கள் வாழ்வில் சமூக கட்டுப்பாடுகளை மீறி, தங்களை தாங்களே புரிந்து கொண்டு வாழ்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இது போன்ற நேர்மையான உரையாடல்கள் தான், நவீன சமுதாயத்தில் பெண் உரிமைகளுக்கான உரிய இடத்தை உருவாக்கும் என நடிகை பாமாவின் பேச்சு உணர்த்துகிறது.

இதையும் படிங்க: நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கு சர்ப்ரைஸ்..! மணமக்களை நேரில் வாழ்த்திய விஜய் சேதுபதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share