உதவி கேட்பதில் தவறில்லை.. அந்த மாதிரியான வலிக்கு இது தான் ஒரேவழி..! நடிகை சாரா அலிகான் பேச்சு..!
நடிகை சாரா அலிகான், அந்த மாதிரியான வலிக்கு உதவி கேட்பதில் தவறில்லை என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது யாரையும் விட்டு வைக்காத ஒரு நிழலாகி விட்டது. அந்த நிழலை தைரியமாக எதிர்கொள்வது தான் உண்மையான வலிமை என்று பாலிவுட் நடிகை சாரா அலி கான் கூறியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த ஒரு நேர்காணலில் அவர் மனநலம், உணர்ச்சி, மற்றும் வாழ்க்கை சமநிலை பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார். இப்படி இருக்க சாரா அலி கான் — நடிகர் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள் ஆவார். இப்படிப்பட்ட அவர் பிரபலமான பட்டோடி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தாத்தா புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரரும், பட்டோடி நவாபுமான மன்சூர் அலி கான் பட்டோடி, பாட்டி பிரபல நடிகை ஷர்மிலா தாகூர்.
அந்த குடும்பத்தின் கலை மற்றும் பாரம்பரியத்தை தொடர்ந்தவர் சாரா அலி கான். அவர் தனது சினிமா வாழ்க்கையை 2018-ம் ஆண்டு வெளியான “கேதார்நாத்” திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் “சிம்பா”, “லவ் ஆஜ் கல்”, “அதிரங்கி ரே”, “ஜரா ஹட் கே ஜரா பச் கே” போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்றைக்கு பாலிவுட் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக அவர் வலம் வருகிறார். சமீபத்தில் ஒரு பிரபல மீடியா நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் சாரா அலி கான், “மனநலம் என்பது உடல் நலத்துக்கு இணையான முக்கியமான ஒன்று. நாம் உடல் வலி இருந்தால் மருத்துவரை அனுகுவோம். அதேபோல மனம் வலிக்கும் போது மனநல நிபுணரை அணுகுவது தவறில்லை. மன அழுத்தம், கவலை, பயம் போன்றவை இயல்பான உணர்வுகள்.
அதை மறைப்பது அல்லது தடுக்க முயல்வது தீர்வல்ல. அத்துடன் நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது உதவி கேட்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல. அது ஒரு வலிமையான செயல். உதவி கேட்பது, நம் வளர்ச்சிக்கும் நலம் அடைவதற்குமான முதல் படி. நாம் ஜிம்மிற்கு சென்று உடலை பராமரிப்போம், சரியான உணவு உண்ண முயல்வோம். அதே நேரத்தில் நம் மனதையும் அதே அளவு கவனிக்க வேண்டும். மனம் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், உடல் ஆரோக்கியம் பொருளற்றதாகிவிடும். சில நேரங்களில் அதிக வேலை, பிரஷர், அல்லது சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் நம்மை பாதிக்கும்.
இதையும் படிங்க: ஹிந்தியில் பாட்டு கேட்கவே பிடிக்கல...! பலநாள் ரகசியத்தை பொதுவெளியில் உடைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..!
அப்போது நான் ஓய்வு எடுத்து, தியானம் செய்வேன், குடும்பத்துடன் நேரம் செலவிடுவேன். மேலும் இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரிய சவால் சமூக ஊடக அழுத்தம் தான். ஒவ்வொருவரும் பிறருடன் ஒப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இது நம் மனநலத்திற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் இதை உணர்ந்தபின், சமூக ஊடகங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த தொடங்கினேன். அத்துடன் மன அழுத்தத்திலிருந்து மீள ஒரே வழி – நம்மை நாம் நேசிப்பது. நம் குறைகளை ஏற்றுக்கொண்டு, நம் சிறப்புகளை பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்க முடியாது, அதுதான் சரி” என்றார். அவரது இந்த கருத்துகள் பல இளம் ரசிகர்களுக்கு ஊக்கமாக அமைந்தன. சாரா அலி கான் கூறிய இந்த மனநலம் குறித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.
இந்த சூழலில் சாரா அலி கான் மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் பல பாலிவுட் நடிகர்கள் மனநலத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தீபிகா படுகோனே தனது மன அழுத்த அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து The Live Love Laugh Foundation என்ற அமைப்பை தொடங்கினார். அதேபோல் அலியா பட்ட், ரன்வீர் சிங், மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் மனநல அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இப்போது சாரா அலி கானும் தனது கருத்துகளால் இளம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக மாறியுள்ளார். குறிப்பாக பேட்டியின் இறுதியில் சாரா, “முன்பு நான் எல்லாவற்றையும் விரைவாக சாதிக்க நினைத்தேன். ஆனால் வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்தது – சில நேரங்களில் ஓய்வெடுப்பது, அமைதியாக இருப்பது தான் மிகப் பெரிய வெற்றி. அந்த அமைதியே மனநலத்தின் அடிப்படை” என்றார்.
இதனை அடுத்து மனநல நிபுணர்கள் சாராவின் கருத்தை வரவேற்றுள்ளனர். அவர்கள் இதனை குறித்து பேசுகையில், “பிரபலங்கள் திறந்த மனதுடன் மனநலம் குறித்து பேசுவது சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது இளம் தலைமுறைக்கு தைரியம் தரும். மன அழுத்தம் பற்றி பேசுவது அவமானமல்ல, அது மனிதநேயம்.” என்கின்றனர். ஆகவே இன்றைய இளம் தலைமுறைக்கு மனநலம் என்பது பேச முடியாத ஒரு தடைப்பட்ட விஷயமாக இருந்தது. ஆனால் சாரா அலி கான் போன்ற பிரபலங்கள் இதை திறந்த மனதுடன் பேசுவதால், அந்த தடைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.
அவர் சொன்ன ஒரு வரி தான் இந்த கருத்தின் மையம், “மன அழுத்தத்தில் இருக்கும்போது உதவி கேட்பதில் தவறில்லை. அது பலவீனம் அல்ல, அது வளர்ச்சி” இந்த வரி தான் இன்றைய சமூகத்துக்கு தேவைப்படும் மிக முக்கியமான உண்மை.
இதையும் படிங்க: என் படம் தீபாவளிக்கு ரிலீசாக ஏதோ தகுதி வேண்டுமாம்..! அப்படி என்ன இல்லை 'டீசல்' படத்தில்.. கொந்தளித்த ஹரிஷ் கல்யாண்..!