×
 

வெளியானது சிம்புவின் "ஓ மாறா" பாடல்..!  ரசிகர்களை உற்சாகப்படுத்திய தக் லைஃப் பட சாங்..!

தக் லைஃப் படத்தில் உள்ள சிம்புவின் ஓ மாறா பாடல் வெளியானது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்துள்ள திரிஷா சமீபத்தில் தக் லைஃப் படத்தில் தனது கேரக்டர் குறித்து பேசியிருந்தார்.

அதில் "இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை கண்டிப்பாக சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் ஒப்பு கொண்டேன். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்காக "கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் எனக்கும் இருந்தது" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லப்பர் பந்து சுவாசிகாவா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸிங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்குறாங்களே!

மேலும், நடிகர் சிம்பு கூறுகையில், " தக்லைஃப் படத்த்தில் என்னை நடிக்க கூப்பிட்டார் மணி சார். ஆனால் சில காரணங்களால் என்னால் அப்படத்தில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் மீண்டும் அதே வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் அது சாதாரணமாக வரவில்லை கமல் சார் கூட வந்தது. ஆதலால் இந்த நேரத்தில் கமல் சாருக்கும் மணிரத்தினம் சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு அரிய விதமான கேரக்டரை எனக்கு கொடுத்ததற்காக உங்கள் இருவரையும் என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் என்றார்.

இப்படி பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், படத்திற்கான ஹைப் மக்கள் மத்தியில் எகிறியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதன்படி,


ஜம்பப்பா மன்னாரே
லம்பாபா மன்னாரே
ரம்பா சொல்லமா செஞ்சாரே (2)
ஓ மாரா!

ஒருலே சிங்கம்-ஆ சிம்பிள்-ஆ சிங்கிள்-உஹ் சூதுரா சின்னம் நான் தேய் ! 
பங்கமா பார்ப்பேன்.. உங்கள பணிவு-ஆ இருகா உடுவேன் தேய் !
நேருலே தங்கமா ஜோலிபேன்-னு நம்பி நீ வந்தேனா தருவேன் கை !
ஏர்-லே சத்தமா வெடிக்கும் வெடி நான் உனக்கு தெரியாத வாய் ! 

ஓ இருக்குறே மனசு, நான் காரம் வெச்சு புடிக்கிற டார்கெட்..
en மார்க்-லே நிக்கிற ஆளுக்கு நம்பிக்கை இல்லே bro !
தெறிகிடு தோட்டா ! நான் குடுகுறேன் எச்சரிக்கை !
உன்னே எனக்குள்ளே இருக்குறே வெருப்புலே முடிபெண் ஜிலோ !
ஒரு காசோலை ஒன்று இரண்டு மூன்று! துப்பாக்கி முனையில் முடிகிறே பொழுதுபோக்கு!

ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் !
யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் !
இது யாருக்கும் அடங்காத ரணம் !
இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா 

இப்படியான வரிகளை கொண்ட இப்பாடலை 'பால் டப்பா' எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஓடிடி நிறுவனங்களுக்கு செக் வைத்த அமீர்கான்..! மகிழ்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள், யூடியூப் பயனாளர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share