நாளை கோலாகலமாக வெளியாக உள்ள ‘கூலி’ திரைப்படம்..! சிறப்பு காட்சியில் அதிரடி காட்டிய தமிழக அரசு..!
‘கூலி’ திரைப்படம் நாளை கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் உலகளாவிய ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் தான் ‘கூலி’. இந்த திரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து பணியாற்றும் முதல் படம் என்பதாலேயே இந்த திரைப்படம் வெளியாவது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீப காலத்தில் தொடர்ந்து தரமான ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி பெரும் கவனம் ஈர்த்தவர். அவரது இயக்கிய கதைகளின் தொகுப்பு, கதாபாத்திரங்களின் பல பரிமாணம் என இவை அனைத்தும் தமிழ் சினிமாவை ஒரு புதிய கண்ணோட்டத்தில் வடிவமைத்துள்ளன. இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து ‘கூலி’ எனும் தலைப்பில் உருவாக்கி இருக்கும் இந்த படம், புதிய தலைமுறை மற்றும் பழைய தலைமுறை ரசிகர்களையும் ஒரே நேரத்தில் ஈர்க்கும் வகையில் அமைகிறது. மேலும் அனிருத் ரவிச்சந்தர், தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். ரஜினிகாந்துடன் இதுவரை பேட்ட, தர்பார், ஜெயிலர் போன்ற வெற்றிப்படங்களில் பணியாற்றிய அனிருத், இப்போதும் ‘கூலி’ படத்திற்காக இளைய தலைமுறையின் ரிதமையும், ரஜினியின் மாஸும் கலந்து ஒரு தனி இசை அனுபவத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில், இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. இந்த சூழலில் ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமல்லாமல், பல மொழி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அதன்படி அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜூனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல நட்சத்திரங்கள் இணையும் இந்த படம், தமிழ்ச் சினிமாவை உலகத் தரத்தில் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெகு நாட்களாகவே ரசிகர்களிடையே பெரும் ஹைப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், பட வெளியீட்டை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு, ‘கூலி’ படத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இப்படத்தின் வெளியிட்டின் முதல் காட்சி – காலை 9.00 மணியில் இருந்து இறுதிக் காட்சி நள்ளிரவு 2.00 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது அரசு. இதுவரை சில முக்கிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இவ்வாறு அதிகப்படியான காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 'கூலி' படம் பார்க்க ஆசையா..! ஊழியர்களுக்கு டிக்கெட், உணவு செலவுடன் விடுமுறை அறிவித்த நிறுவனம்..!
இந்த சூழலில் 'கூலி' படத்திற்கான இந்த அனுமதி, படம் மீதான அரசு ஆதரவும், ரசிகர்கள் எதிர்பார்ப்பும் எவ்வளவு உயர்வாக உள்ளன என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் ‘கூலி’ பட வெளியீட்டை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே ‘கூலி’ திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட் விற்பனை, வெறும் சில மணி நேரங்களில் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஹவுஸ் புல் நிலை, இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு ஆகிய நாட்களிலும் காணப்படுகிறது. இப்படியாக சில மல்டிபிளக்ஸ் தளங்களில், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.750 வரை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே LCU எனப்படும் சினிமா யூனிவர்ஸை உருவாக்கி வருகிறார். அதில் கைதி, விக்ரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது ‘கூலி’ அந்த லிஸ்டில் சேருகிறதா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘கூலி’ என்பது இது வெறும் ஒரு திரைப்படம் அல்ல.
இது தமிழ் சினிமாவின் புதிய பக்கம். ரஜினிகாந்த், தனது நடிப்பின் முழு வலிமையுடன், புதிய தலைமுறை இயக்குநரின் பார்வையில் இன்னொரு மாஸ் ஆவதற்கான படைப்பு என்கின்றனர் சினிமா ரசிகர்கள். இந்த படம் தமிழ் சினிமாவின் வர்த்தக வசூல், தொழில்நுட்ப தரம், கதை சொல்லும் விதம் ஆகியவற்றில் ஒரு புதிய அளவை நிர்ணயிக்கக்கூடும்.
இதையும் படிங்க: 'கூலி'யில் ஹீரோவே நான் தான்..ரஜினி இல்ல..! நாகார்ஜூனாவின் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!