×
 

உலக அளவில் டாப் 10 இடத்தை பிடித்த "டூரிஸ்ட் ஃபேமிலி"..! வியப்பில் சினிமா பிரபலங்கள்..!

உலக அளவில் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.

இன்றைய காலத்தில் இதுபோன்ற படங்கள் தான் தேவை என அனைவரும் கூறும் வகையில் வெளியாகியுள்ள படம் தான், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி'.  

இத்திரைப்படத்தின் மையக்கருத்து என பார்த்தால், இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பாத்து அழுதுற போறீங்க..."ஃபிரீடம்" கதையல்ல நிஜம்..வந்து பாருங்க..! நடிகர் சசிகுமார் பேச்சு..! 

இந்த படத்தை குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை பாராட்டுகளாக கொடுத்து வந்தாலும் படம் வெளியாவதற்கு முன்பாக இயக்குனர் சமுத்திரக்கனி இந்த படத்தை பற்றி கூறியது தான் பலருக்கும் நம்பிக்கை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் அதன்படி, "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை கூறுவேன். உண்மையிலேயே இந்த படம் மிகவும் அருமையாகவும் மகிழ்விக்கும் வகையிலும் பெருமையாகவும் இருந்தது. இந்த படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே சொல்வர்.

சசிகுமாருக்கு எப்படி சுப்பிரமணியபுரமோ, எனக்கு எப்படி நாடோடிகளோ அந்த வகையில் உங்களுக்கு தான் இந்த படம். இதனை உங்களால் வெல்லவே முடியாது. இந்த படம் அறத்தை பற்றி சொல்லும் படம், அன்பு அதிகமாக கொடுக்கும் படம், அதுமட்டுமல்லாமல் நேர்மையான படம்" என புகழ்ந்து தள்ளினார். இந்த வார்த்தையை கேட்டு தான் பலரும் படத்தை காண சென்றனர்.

இப்படி இருக்க, டூரிஸ்ட் ஃபேமிலி படம் பிரபல ஓடிடி தளமான "ஜியோ ஹாட் ஸ்டாரில்" ஜூன் மாதம் 2ம் தேதி வெளியானதை அடுத்து அதனை மக்கள் பெரிதும் கொண்டாடினர். இந்த சூழலில், சர்வதேச அளவில் உள்ள அனைத்து விமர்சகர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்யும் தளங்களில் முன்னணி தளமாக விளங்குவது ஒன்ரே ஒன்று தான். அது தான் "Letterboxd". இந்த தளத்தில் ஒரு படத்தின் பெயர் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஆனால் 2025ம் ஆண்டு வெளிவந்த வெளிவந்த திரைப்படங்களின் லிஸ்டில் டாப் 10 படங்களுக்குண்டான பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

அதன்படி, இந்த தளத்தில் முதல் இடத்தை "Sinners" என்ற திரைப்படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் "Latin Blood - The Ballad of Ney Matogrosso", மூன்றாவது இடத்தில் "Manas", நான்காவது "Ne Zha 2", ஐந்தாவது இடத்தில் "Sorry Baby", ஆறாவது இடத்தில் "Southern Chronicles", ஏழாவது இடத்தில் "Little Amélie or the Character of Rain", எட்டாவது "Late Shift", ஒன்பதாவது இடத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த "Tourist Family" படம், பத்தாவது இடத்தில் "How to Train Your Dragon" போன்ற படங்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. 

இப்படி உலக அளவில் மிகப்பெரிய ஹாலிவுட் படங்கள் இருக்கும் இடத்தில் டாப் 10-ல் ஒன்பதாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது தமிழ் படமான "டூரிஸ்ட் ஃபேமிலி". இதனை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த டாப் 10ல் 9வது இடத்தை தமிழ் திரைப்படமான டூரிஸ்ட் பேமிலி பிடித்துள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பிடித்த ஒரே படமும் இதுவே ஆகும். 

இதையும் படிங்க: 2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share