×
 

சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்..!! ‘டோரதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட லுக் லைக் போட்டோஸ் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சேலையில் செம அழகு..!! ‘ஹார்ட் பீட்’ நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!


கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திரைப்படம் இந்தியாவில் வெளியாகும் முன்பாகவே சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்பட விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்படுவது, அந்தப் படத்துக்கு உலகளாவிய பார்வையாளர்களிடம் கவனத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் ‘டோரதி’ படத்திற்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தனது படத்தின் சர்வதேச திரையிடல் நிகழ்வில் பங்கேற்றதுடன், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: கார்த்தியை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூரி..!! ‘மண்டாடி’ வெற்றியால் ட்ரெண்டாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share