×
 

கதாநாயகனாக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்..! 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்..!

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை வழங்கும் நிறுவனங்களாக மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களின் தயாரிப்பில் வெளியான குட்நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்கள், வெற்றிகரமான வரவேற்பை பெற்று இருக்கிறது. இதில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், கலவையான விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஏ.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மகேஷ் பசலியான் தனது அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். புதிய படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதன் பூஜை விழா வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி, சென்னையில் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்றால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநராக பணியாற்றிய அபிஷன் ஜீவிந்த், இப்போது கதாநாயகனாக இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரது இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம், ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடியை தாண்டிய வசூலை பெற்று, 2025களில் வெளியாகிய மிகச்சில காமெடி-டிராமா படங்களில் ஒன்றாக திகழ்ந்தது. அந்த வெற்றியின் பின்னர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் சினிமா வட்டாரங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி இத்திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக, மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகை அனஸ்வர ராஜன் தேர்வாகியுள்ளார். ‘தன்சர் மெட்ரோ’, ‘சூப்பர் ஷரண்யா’ போன்ற படங்களில் நடித்த அனஸ்வர ராஜன், இப்போது தமிழ் சினிமாவிலும் தன்னுடைய இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ் திரையுலகில் அவருக்கான முக்கியமான முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குநராக மதன் அறிமுகமாகிறார்.

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ‘பிளாக்மெயில்’..! வெளியீட்டை தள்ளிப்போட்ட படக்குழு..!

இவர், டூரிஸ்ட் பேமிலி படத்தின் போது அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இயக்குநராக அவருக்கு இது முதல் வாய்ப்பு என்பதால், ஒரு புது பார்வை, புது இயக்கம் ரசிகர்களுக்கு கிடைக்கும் எனக் கூறலாம். ரசிகர்கள் தரமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இப்படி இருக்க, டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெற்றியை பெற்று, திரையுலகத்தின் கவனத்தை பெற்றதோடு இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பக்கம் திருப்பியிருந்தது. காமெடி, குடும்பம், உணர்வு ஆகிய அம்சங்களை சரியாக கலப்பதற்கேற்ப படம் அமைந்திருந்தது. அதன் வெற்றி காரணமாகவே, தற்போது அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படத்திற்கான தொடக்கமாக வருகிற 3ம் தேதி நடைபெறும் பூஜை விழா, தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. அபிஷன் ஜீவிந்தின் கதையெழுத்து, நடிப்பு, இயக்க முன்னணியில் அவருடன் பணியாற்றிய மதனின் இயக்கம், அனஸ்வர ராஜனின் நடிப்பு என அனைத்தும் திரையில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், உதவி இயக்குநர் மதன் இயக்குநராகவும் இணையும் இந்த புதிய படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய நம்பிக்கையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை..கண்ணீர் விட்ட ரெசார்ட் மேலாளர்..! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கல்பிகா கனேஷ்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share