×
 

கமல்ஹாசனை மிரளவைத்த அஸ்வத் மாரிமுத்து..! ஒரே கதை.. அரண்டு போன ராஜ்கமல் பிலிம்ஸ்..!

ஒரே கதையில் கமல்ஹாசனை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.  

பத்து வருட தொடர் உழைப்பு, கல்லூரியில் கண்ட கனவை அடைய எடுத்த கடுமையான முயற்சி, அவமானம் என பலவற்றை கடந்து இன்று உழைப்பால் உருவான தனது இரண்டாவது படத்திலேயே, பலரது பாராட்டையும் பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தும் பல இயக்குனர்களின் வரவேற்பையும் பெற்ற இயக்குனராக வலம் வருபவர் தான் அஷ்வத் மாரிமுத்து. ஆனால் எல்லோரும் அவரை பாராட்டினாலும், விதை பிரதீப் ரங்காகத்தானும், AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் போட்டது என அனைவரும் கூறுவர்.

AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரி, விஜே சித்து, ஹர்ஷத்கான், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். அட்டகாசமான இப்பத்தை சிறப்புக்காட்சியில் முதலில் பார்த்து வாழ்த்து கூறியவர் என்றால் நடிகர் சிம்புதான்.

அவரை தொடர்ந்து, படம் வெளியான பின்பு இயக்குநர் சங்கரும், தனது எக்ஸ் தளத்தில், "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இது போன்ற ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு ஹாட்ஸ் ஆஃப். படத்தில் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருந்தனர்.படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க: ஆஃப் செஞ்சுரி அடித்த டிராகன் திரைப்படம்.. போஸ்ட் போட்டு மகிழ்ந்த தயாரிப்பு நிறுவனம்..!

இப்படி பலரது பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், தனது தாய் மற்றும் தந்தை உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், "நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, எனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் தற்பொழுது பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்" என்று குறிப்பிட்டு இருந்தார். இது பலராலும் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து, டிராகன் படத்தின் மாபெரும் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இப்படி இருக்க, அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படமான "காட் ஆஃப் லவ்" படத்தை குறித்து சிம்புவிடம் அவர் பேசிவருவதாக பலரும் வதந்திகளை பரப்ப அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "தயவுசெய்து என் அடுத்த படங்களின் லைன்அப் பற்றி வதந்திகள் பரப்பாதீங்க. எதாவது இருந்தால் நானே முதல் ஆளாக அறிவிக்கிறேன். நன்றி" என தனது இணைய தளத்தின் வாயிலாக பதிவிட்டு இருந்தார் அஷ்வத் மாரிமுத்து. 

இந்த நிலையில் அஷ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி தனது புதிய கதையை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்ந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த கதைக்காக சரியான உறுதியை இன்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்படவில்லை. ஆனாலும் கண்டிப்பாக நடிகர் கமல்ஹாசனுடன் அஷ்வத் மாரிமுத்து தந்து வலுவான கூட்டணியை அமைத்தார் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share