விமர்சனம் என்ன எனக்கு புதுசா..! தக் லைஃப் படம் வரட்டும் அப்பறம் பாருங்க - நடிகை த்ரிஷா ஓபன் டாக்..!
த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள தக் லைஃப் படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை த்ரிஷா.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் வெளியான சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆனது. இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தான். ஆக விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த '96 திரைப்படம்' மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தை த்ரிஷாவின் காம்பேக் படமாக பார்த்தனர் தமிழ் ரசிகர்கள். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் த்ரிஷாவையே பலரும் நோக்கினர். அந்த அளவிற்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படி, 21 ஆண்டுகளாக, சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் த்ரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் த்ரிஷா. இப்படி பட்ட திரிஷாவின் ஆரம்ப வாழ்க்கை, "மிஸ் இந்தியா" மற்றும் "மிஸ்.மெட்ராஸ்" போன்ற அழகி போட்டியில் தொடங்கியது. அதில் பங்குபெற்று வெற்றி பெற்ற நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இதனை அடுத்து, இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான "லேசா லேசா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: Trisha Photos: சுகர் பேபியாக மாறி... வெள்ளை புடவையில் சூடேற்றிய த்ரிஷா!
இந்த சூழலில், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி இருக்க, இந்த படத்திற்கான ப்ரமோஷன்கள் அதிகமாக செய்யப்பட்டு வரும் வேளையில் நடிகை த்ரிஷா அளித்துள்ள பேட்டி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
தக் லைஃப் படத்தில் தனது கேரக்டர் குறித்து திரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை கண்டிப்பாக சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் ஒப்பு கொண்டேன். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்காக "கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் எனக்கும் இருந்தது" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகை திரிஷாவின் 42வது பர்த்டே.. இப்படி ஒரு கொண்டாட்டமா..! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!