×
 

என்ன பாத்தலே என்ன தான் வருமோ.. கோபத்தில் பொங்கிய வாணி போஜன்.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!

தன்னை பற்றி தவறாக பேசுவதாகவும் கமென்டுகளில் திட்டுவதாகவும் நடிகை வாணி போஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் வண்ண கோலங்கள் படைத்தவர் தான் நடிகை வாணி போஜன். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தெய்வ மகள் சீரியல் மூலமாக அனைத்து இல்லங்களிலும் ஒளியாக வந்தார். பின்பாக "ஓ மை கடவுளே" படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதற்கு பின்பாக பல பட வாய்ப்புகளும் அவரை வந்த வண்ணம் உள்ளது. அதே போல் நெகட்டிவ் கமெண்ட்சும் அவரை பாடாய் படுத்துகிறது.

ஏற்கனவே, சமூக வலைத்தளத்தில் நடிகைகள் பற்றி தவறாக பேசுவதாக வாணி போஜன் வருத்தம் தெரிவித்து இருந்தார்.அதில் அவர் கூறும்போது, "சமூக வலைத்தளத்தில் என்னைப் பற்றி வரும் கேலிகளும், வதந்திகளும் எனக்கு அழுத்தம் கொடுக்கவே செய்கிறது. ஒரு பெரிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதை பார்த்து பலரும் என்னிடம் துக்கம் விசாரிப்பதுபோல் கேட்டனர். அந்த படத்தில் நீங்கள் நடிக்கவில்லையாமே? எதற்காக உங்களை நீக்கினார்கள்? என்றெல்லாம் விசாரித்தனர். இதுபோன்ற அழுத்தங்கள் நடிகைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது.

இதையும் படிங்க: ரூமுக்கு அழைத்த இயக்குனர்.. ஒரு நொடியில் அத்துமீறல்.. நடிகையின் பேச்சால் பதற்றம்..!

இதில் காமெடி என்ன வென்றால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை வைத்து தவறாக பேசுகிறார்கள். நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடும் தொடர்பு படுத்தி தவறாக சித்தரித்து பேசுகின்றனர். என தனது வருத்தத்தை கூறி இருந்தார்.

இந்த பேட்டி வந்தே இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். ஆனால் அவரது வருத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் இன்றும் முடிவு வந்த பாடில்லை. இந்நிலையில்,தற்பொழுது பேட்டி ஒன்றில் அவரை குறித்து வரும் மோசமான செய்திகள் கமெண்ட்டுகள் வந்துள்ளது என மன வருத்தத்துடன் கூறிய வாணி போஜன், "சில நேரம் என்னை குறித்து வரும் தவறான செய்திகளை பார்க்கும்போது ஆத்திரமாக தான் இருக்கும். ஏதோ,நடந்த அனைத்தையும் நம்முடன் நேரில் இருந்து பார்த்தது போன்று எழுதுவார்கள். அதை பார்க்கும்போது சற்று கோபமாக இருக்கும். ஆனால், தற்போது இவர்களை திருத்த முடியாது என கூறி அனைத்தையும் கடந்து வந்து விட்டேன். எழுதுவது உங்கள் விருப்பம் மகிழ்ச்சியுடன் இருப்பது என் இஷ்டம் என வாழ்ந்து வருவதாக" கூறியுள்ளார்.

இதனை பார்த்த பலரும் இவர்களை பற்றி தவறாகவே எழுத வேண்டும் என ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது. அப்படி அவர்களுக்கு வாணி போஜன் என்ன தான் செய்தாரோ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.    

இதையும் படிங்க: பிரபல மாடலின் கவர்ச்சி புகைப்படம்..தெலுங்கு நடிகையின் கவர வைக்கும் போட்டோ ஷூட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share