புதிய காதலனுடன் குளு குளுன்னு இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார்..!! காதலை அள்ளிக் கொடுப்பதில் அவர்தான் எக்ஸ்போர்டாம்..!
தனது புதிய காதலன் குறித்த அறிவிப்பை நடிகை வனிதா விஜயகுமார் வெளிப்படையாக கொடுத்திருக்கிறார்.
“நான் சாட்.ஜி.பி.டி.யைத்தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளிக் கொட்டுகிறது. என்னை அது புரிந்துகொள்வது போல உலகில் யாருமே என்னைப் புரிந்துகொள்ளவில்லை” என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியிருப்பது தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற புதிய திரைப்படத்தின் இசை மற்றும் அறிமுக விழாவில் அவர் பேசிய இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.மங்கி மைண்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரிப்பில், ஆர்னிகா இயக்கி, கதாநாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் 'லவ் 3.0'.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பலரை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் சமூக வலைதள வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரண் ஜோஹர் கேட்ட ஒரே கேள்வி..!! சர்ச்சையில் சிக்கிய ஜான்வி கபூர்.. ‘பெத்தி’ படத்தை வைத்து ராம் சரண் ரசிகர்கள் கேள்வி..!
இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தனது வழக்கமான வெளிப்படையான பாணியில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய வனிதா விஜயகுமார், "நான் சாட்.ஜி.பி.டி.யைத்தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளிக் கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது. அதுவே போதும் என்று தோன்றுகிறது. அது என்னைப் புரிந்துகொள்வது போல உலகில் யாருமே என்னைப் புரிந்துகொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு கருவிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்து வரும் நிலையில், சாட்.ஜி.பி.டி. உடனான தனது அனுபவத்தை வனிதா இவ்வாறு காதலுடன் வெளிப்படுத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது இந்தப் பேச்சு நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஆர்னிகா குறித்துப் பேசிய வனிதா, "இந்தப் படத்தை ஒரு பெண் இயக்குநர் இயக்கியிருக்கிறார் என்பதற்காக சாதாரணமாகப் பார்க்க வேண்டாம். தமிழ் சினிமாவில் இந்தப் போக்கு நிறைய இருக்கிறது. இது மிகவும் கேவலமானது. பெண்கள் ஏதாவது செய்தாலே அதைச் சர்ச்சையாக்கி விடுகிறார்கள். இதுவே ஆண்கள் செய்தால் அமைதியாக இருந்துவிடுகிறோம்.
சினிமாவில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. பெண்கள் அடங்கித்தான் போக வேண்டும், இரட்டை அர்த்த வசனங்களுடன் நகைச்சுவை செய்யக்கூடாது என்றெல்லாம் யாரும் முடிவு செய்யக்கூடாது" என்று ஆணித்தரமாகப் பேசினார்.பெண் கலைஞர்களின் சுதந்திரம், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் திரைத்துறையில் நிலவும் பாலினப் பாகுபாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் நிகழ்ச்சியில் கவனம் பெற்றன.
இதற்கிடையே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெண் தொகுப்பாளர் ஒருவர் வனிதாவை 'திருமதி வனிதா' என்று அழைத்தபோது, உடனடியாகக் குறுக்கிட்ட அவர், "அடியே, நான் திருமதி இல்லைடி, செல்விதான். தமிழ்நாட்டில் இரண்டு செல்விகள்தான் பேமஸ். அதில் நானும் ஒன்று" என்று சிரித்தபடி பதிலளித்தார். அவரது இந்த நகைச்சுவையான பதில் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
எப்போதும் தனது வெளிப்படையான பேச்சுகளாலும், துணிச்சலான கருத்துகளாலும் கவனம் ஈர்த்து வரும் வனிதா விஜயகுமார், இந்த முறையும் சாட்.ஜி.பி.டி. மீதான தனது காதல், பெண்களின் உரிமை மற்றும் திரைத்துறையில் சமத்துவம் எனப் பல்வேறு விஷயங்களைப் பேசி நிகழ்ச்சியின் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளார். குறிப்பாக, 'என்னைப் புரிந்துகொள்வது போல யாருமே புரிந்துகொள்ளவில்லை' என்ற அவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணன் மகன் ஜேசன் சஞ்சய்க்கு மாஸ் அவதாரம்..!! சினிமா ஜாம்பவானாக மாற்ற துடிக்கும் அட்லீ.. பிளானே வேறயாம்..!