விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!
அதிகாலையில் விக்னேஷ் சிவன் கண்ணில் பட்ட அதிசயம்.
விக்னேஷ் சிவன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது படம் அல்ல அவரது மனைவிதான். காரணம் அவரது மனைவி நயன்தாரா என்பதாலே இவரும் ஃபேமஸாக உள்ளார். ஆனாலும் நயன்தாராவை மணப்பதற்கு முன்பாகவே அவர் இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக தன்மை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வருபவர். இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் விக்னேஷ் சிவன் 2007-ம் ஆண்டு வெளிவந்த "சிவி" என்னும் திகில் நிறைந்த திரைப்படத்தில் சொல்லப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமானார். பின், 2014-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் இன்ஜினியர்களை கவர்ந்த "வேலை இல்லா பட்டதாரி" திரைப்படத்தில் அவருடன் நடித்து திரையுலகில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் வெளியான "போடா போடி" திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து, நடிகர் தனுஷ் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு "நானும் ரவுடிதான்" என்ற திரைப்படத்தினை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வர ஆரம்பித்தார். பின் இந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட, இருவரும் நீண்ட நாட்களாக லிவ்விங்கில் இருந்தனர். அதன்பின், 2022 ஜூன் 09ம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் ஃபிளாப் ஆன நயன்தாராவின் "டெஸ்ட்"..! உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி..!
பின் அடுத்த ஒரு மாதத்திற்குள் இருவரும் இரண்டு அழகான ஆண்குழந்தைகளை கையில் வைத்து கொண்டு தங்களுக்கு குழந்தை பிறந்ததாக அறிவிக்க இணையத்தளமே ஆட்டம் கண்டது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் "அது எப்படி திமிங்கலம்" என கூற, பின் இந்த குழந்தைகள் வாடகை தாய் உதவியின் மூலமாக பெறப்பட்டதாக கூறினர். மேலும், இவர்களது திருமண வீடியோவை நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனம் "பியாண்ட் தி ஃபேரி டேல்"(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே, அதில் "நானும் ரவுடி தான்" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், திடீரென ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸை நயன்தாராவிற்கு அனுப்ப ஹனிமூனில் கூட நிம்மதியாக இருக்க முடியாமல் இருவரும் கடுப்பில் இருந்தனர்.
இப்படி பட்ட விக்னேஷ் சிவன் இதுவரை, போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை, சாஹோ, என்.ஜி.கே, பாவ கதைகள், மாஸ்டர், வலிமை, டான், எதற்கும் துணிந்தவன், காத்துவாக்குல ரெண்டு காதல், ஜெயிலர், இங்க நான் தான் கிங்கு, ஜோஷ்வா இமை போல் காக்க உள்ளிட்ட படங்களுக்கு பாடலாசிரியராகவும், பாவ கதைகள், கூழாங்கல், நெற்றிக்கண், கனெக்ட், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார்.
இப்படி இருக்க, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிரூத் இசையமைப்பில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படி அனைவரையும் வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் "லீக்". இப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்த நிலையில் படம் நல்லபடியாக ஓட வேண்டும் என விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை வேளையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக இறங்கிய த்ரிஷா..! 2025ல் பல படங்கள் கைவசம்..!