ஜனநாயகன் படத்தில் நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. வெயிட் அண்ட் வாட்ச் - நடிகை பிரியாமணி..!
ஜனநாயகன் படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது நடிகை பிரியாமணி கூறிய தகவல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஊருக்கே தளபதினாலும் கட்சிக்கு தலைவர் தானே அப்படிப்பட்ட தளபதியின் கடைசி படத்தை சும்மா விடுவோம் என்று நினைத்தாயோ என ஜனநாயகன் படத்திற்காகவும் அதன் அப்டேட்டுக்காகவும் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களுக்கு அடுத்தடுத்த இன்பச் செய்திகளை கொடுத்து வருகிறார் ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குனர்.
இப்படி இருக்க ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடி இருக்கிறார் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் துள்ளி குதித்து ஆட்டம் போட்டது எல்லாம் மறக்க முடியாத நிகழ்வு என்றே சொல்லலாம். எதற்காக விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கிறது என்று பார்த்தால், சினிமா துறையில் அவரது கடைசி படமாக கருதப்படுவதால் தான். எப்படி நடிகர் அஜித் ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் ரேஸில் பங்குபெறும் வேலைகளில் படங்களில் நடிப்பதாலும், படங்களில் நடிக்கும் வேலைகளில் ரேசில் கலந்து கொள்வதாலும் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கிறேன்.
இதையும் படிங்க: இணையத்தை கலக்கி வரும் விஜய்யின் சச்சின் பட unseen புகைப்படங்கள்..!
ஆதலால் இனி வரும் காலங்களில் ரேஸ்களின் போது படங்களில் நடிக்க மாட்டேன். படங்களில் நடிக்கும் பொழுது ரேசில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற முடிவை எடுத்து இருக்கிறார். இதேபோல் தான் நடிகர் விஜய்யும் சினிமாவில் நடித்து கொண்டு அரசியலில் இருந்தால் மக்களுக்கான முழு முயற்சிகளையும் வேலைகளையும் சரிவர செய்ய முடியாது என்பதற்காக, சினிமாவா..? மக்களா..? என முடிவு செய்து கடைசியில், 'ரசிகர்களால் நான் ரசிகர்களுக்காகவே நான்' என முடிவு செய்து, இப்பொழுது அரசியலுக்குள்ளாக வந்து தனது ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி மக்களுக்கு சேவை செய்ய தயார்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
அந்த வகையில் பார்த்தால், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி அதற்கு உண்டான பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி, 2026-ல் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம் என நம்பிக்கை கொடுத்து வருவதுடன், ரசிகர்களுக்கு கடைசி படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து 'ஜனநாயகன்' திரைப்படத்தை ஒரு கையிலும் அரசியல் பிரச்சாரங்களை மறுக்கையிலும் பிடித்துக் கொண்டு வலம் வருகிறார் நடிகர் விஜய்.
இந்த நிலையில், அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நடிகை பிரியாமணி. இதனை பற்றி அவர் கூறுகையில், " உங்களை போல நானும் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவருடன் ஜனநாயகன் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எனது காட்சிகள் படமாக்கப்படவில்லை. விரைவில் எனது காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. அதற்காக நானும் தயாராக உள்ளேன். படத்தில் எனது கதாபாத்திரமும் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முருகனே உங்கள மன்னிக்க மாட்டார்.. இப்படி பண்றவங்க எனக்கு ரசிகரா இருக்க தகுதியே இல்லை.. சூரி ஆவேச பேச்சு..!