×
 

விஜய் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் குறித்து சூப்பர் ஸ்டார் சொன்ன மாஸ் பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் குறித்து ஒற்றை வார்த்தையில் பேசி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோவா பயணத்தை மேற்கொள்வதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். எப்போதும் போல சிம்பிளான உடையும், சிரிப்பும், எளிமையான உடல்மொழியுடனும் அவர் விமான நிலையிற்குள் நுழைந்ததும், அங்கே காத்திருந்த ரசிகர்கள் "அண்ணே!" எனக் கூவி அவரை வரவேற்றனர்.

அந்த சூழலில் அவரைச் சுற்றிவளைத்த செய்தியாளர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். முதலில், நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் -2’ குறித்து கேள்வி கேட்டனர். “ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்படி நடந்து வருகிறது?" என கேட்கப்பட்டபோது, ரஜினிகாந்த் வழக்கமான அமைதியான சிரிப்புடன், “படப்பிடிப்பு நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது… இன்னும் கொஞ்ச நாள் ஷூட்டிங் இருக்கு” என்று பதில் அளித்தார். நெல்சன் தில்லிப்குமார் இயக்கத்தில் உருவாகும் ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை, கோவா, மைசூர் உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் நிலையில், ரஜினி அளித்த இந்த குறு தகவலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கடுத்த கேள்விகள் கோவா பயணம் பற்றியவையாக இருந்தன. “கோவாவிற்கு இந்த பயணம் எந்த காரணத்துக்காக?" என தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினி சிரிப்புடன், “அது ஒரு ப்ரைவேட் விஷயம்… ஓய்வு எடுக்கிறேன்” என்றே குறிப்பிட்டார்.

அடுத்து அவரிடம் 50 ஆண்டுகால சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதும், ரஜினிகாந்த் மிகவும் பணிவாக, “எல்லாம் ரசிகர்களின் ஆதரவு தான்… நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் என்பதால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினியை இயக்க தயாராகும் மருமகன்..! "தலைவர் 173" படத்தின் Director தனுஷ் தான்..?

அவரது இந்த பதில் விமான நிலையத்தில் இருந்தவர்களின் கைதட்டலையும் உற்சாகத்தையும் பெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் “சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்க, ரஜினிகாந்த் எப்போதும் போல மிதமான குரலில், “எது கிடைத்தாலும், ரசிகர்கள் தான் கொடுத்தது… அவர்களுக்கே ரொம்ப நன்றி” என்று கூறினார். இதனிடையே, செய்தியாளர் ஒருவர், “இன்று துணை முதல்வரின் பிறந்தநாள்… அவருக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கும் ரஜினி தன்னுடைய இயல்பான ஸ்மைலுடன், “அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றார்.

ஆனால் சூழ்நிலையை இன்னும் ‘தீவிரமாக்க’ செய்தியாளர்கள் அடுத்த கேள்வியை நேரடியாகக் கேட்டனர். “செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார்… அதைப் பற்றி உங்கள் கருத்து?” என்றனர். பொதுவாக அரசியல் தொடர்பான கேள்விகளில் மிகுந்த கவனத்துடன் பதிலளிக்கும் ரஜினிகாந்த், இந்த முறை சற்றும் யோசிக்காமல், “No comments” என்று மட்டும் கூறி அங்கிருந்து மெதுவாக வெளியேறினார். அவரது "No comments" பதில் மேலும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

அதேசமயம், விமான நிலையத்தில் அவர் ரசிகர்களிடம் கைகளை அசைத்து வாழ்த்தியும், புகைப்படம் எடுக்க முயன்ற சிலருக்கு பதில் சிரிப்பையும் வழங்கி, பாதுகாப்பு குழுவின் நடுவே விமான நிலையத்திற்குள் சென்றார். ரஜினிகாந்தின் கோவா பயணம் தனிப்பட்ட ஒன்றா? அல்லது ’ஜெயிலர் 2’ தொடர்பான படப்பிடிப்பா? அல்லது மற்றொரு புதிய படத்திற்கான லுக்க்டெஸ்டா? என்பது குறித்து தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது.

ஒருபுறம் ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு வேகமாக நடைபெற, மறுபுறம் ரஜினிகாந்தின் ஒவ்வொரு பொதுவான தோற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த குறுகிய சந்திப்பு, மிகுந்த முக்கியத்துவமான தகவல்களையும் சுவாரஸ்யமான தருணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போனில் ட்ரிங்..ட்ரிங் சத்தம்.. பார்த்தா நம்ப சூப்பர் ஸ்டாரு..! உலக சாம்பியன் ஹர்மன்பிரீத் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share