×
 

ரூ.50 கோடியை கடந்த விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’..! இன்று எங்கு வெளியாகிறது தெரியுமா..?

விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ படம் தமிழகத்தை தாண்டி எங்கு வெளியாகிறது தெரியுமா.

தமிழ் சினிமாவில் குடும்பதோடு சேர்ந்து பார்க்கும் திரைப்படங்களை எடுத்து, ரசிகர்களிடம் தனித்த அடையாளம் பெற்று புகழின் உச்சியில் இருப்பவர் இயக்குநர் பாண்டிராஜ். ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தற்போது அவர் இயக்கியுள்ள படம் தான் ‘தலைவன் தலைவி’. இந்தப் படம், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படம் எனும் சிறப்பைத் தாங்கி வெளிவந்துள்ளது. கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நித்யா மேனன், மேலும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி இருக்க ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் கரு என பார்த்தால், கணவன் மற்றும் மனைவி உறவில் ஏற்படும் சிறிய முரண்பாடுகள், கோபம், புரிந்துணர்வு, பிரிவு, சமாதானம் ஆகியவற்றின் வழியாக வாழ்க்கையை புரிந்துகொள்வது எப்படி? என்பதே ஆகும். பாடுபட்ட உறவுகளை தவிர்த்து விடுவதற்கான விரைவான தீர்வாக விவாகரத்து செல்லக் கூடாது என்பதையும், மனதை மாற்றுவதற்கும் மன்னிப்பதற்கும் இடமிருக்க வேண்டும் என்பதையும் இப்படம் அழுத்தமாகச் சொல்லுகிறது.

இந்தக் கரு, விஜய் சேதுபதியின் நேர்த்தியான நடிப்பு மற்றும் நித்யா மேனனின் உணர்வுப் பூர்வமான கதாபாத்திரம் மூலம் உணர்ச்சி ரீதியாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. திரைப்படம் வெளியானது முதலே, முன்பதிவு வசூலில் நல்ல வேகம் கண்டது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.  4 நாட்களில் ரூ.40 கோடியை தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் சேர்த்து வசூலித்துள்ளது. மேலும், உலகளாவிய அளவில், தற்போது படம் ரூ.50 கோடியை கடந்து வசூலில் சாதித்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு..! ரம்யா மோகன் எழுப்பிய சர்ச்சை...சைபர் கிரைமில் புகார் அளித்த நடிகர்..!

இந்த அளவிற்கு ஒரு குடும்பக்கதை கொண்ட திரைப்படம், மாஸ் ஆக்‌ஷன் பாணி இல்லாமலேயே இவ்வளவு வரவேற்பு பெறுவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, ‘தலைவன் தலைவி’ திரைப்படம் தெலுங்கில் ‘சார் மேடம்’ என டப் செய்யப்பட்டு, இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு ரசிகர்களிடம் விஜய் சேதுபதிக்கும், நித்யா மேனனுக்கும் தனியான ரசிகர்கள் வட்டம் இருக்கிறார்கள். எனவே, இந்த திரைப்படம் அங்கும் சிறப்பான வரவேற்பை பெறும் என திரைப்பட விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இயக்குநர் பாண்டிராஜின் கதைகளில் உணர்ச்சி, குடும்ப நெருக்கம், நம்மைச் சுற்றிய சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை உண்டாகும் இடையீடுகள் என எல்லாம் இயல்பாகவே வடிவமைக்கப் பட்டிருக்கும். ஆகவே ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இந்த உறவுகளைக் கைப்பற்றி, குடும்பம் மற்றும் திருமணத்தின் மீதான பார்வையை மிக உணர்வோடு பேசும் வகையில் அமைந்துள்ளது.

கண்டிப்பாக இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோபத்தில் என் மனைவியை அடித்து விட்டேன்..! நடிகர் விஜய் சேதுபதி பேச்சால் பரபரப்பு..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share