×
 

ஜப்பானில் மாஸ் காட்டிய கமல்ஹாசனின் "விக்ரம்"..! இதுவரை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

ஜப்பானில் வெளியான கமல் ஹாசனின் விக்ரம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

நடிகர் அஜித்தின் குட் பேட் அட்லி திரைப்படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் பொழுது இத்திரைப்படம் ஃபேன் பாய் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். அதேபோல படத்தை பார்த்த அனைவரும் இப்படம் நடிகர் அஜித்தின் இத்தனை வருடகால சினிமா வாழ்க்கையில் வந்த படங்களை கண்முன் பார்க்க வைத்தது என தெரிவித்தனர்.

அதேபோல் தான், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படமும். மாநகரம், கைதி, மாஸ்டர் என பல படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது வாழ்நாள் முழுவதும் தான் பார்த்து ரசித்த கமலஹாசனை மீண்டும் அட்டகாசமாக திரையில் மாஸாக பார்க்க நினைத்து அவருக்காக பார்த்து பார்த்து எழுதிய திரைப்படம் தான் இந்த 'விக்ரம்' திரைப்படம். இந்த படத்தில், ரியல் கோஸ்ட் ஆகவே இருக்கும் நடிகர் கமல்ஹாசன், ட்ரக்சை அழிக்க சென்ற தனது மகனை கொலை செய்த மொத்த கூட்டத்தையும் அழிக்க தனது டீமுடன் சேர்ந்து போராடிவரும் திரைப்படமாக இப்படம் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'தக் லைஃப்' படத்துக்கு ரேட்டிங் வந்தாச்சு..! First விமர்சனமே Best விமர்சனமா வந்துடுச்சே..!

மேலும் இந்த படத்தில், நடிகர் கமல்ஹாசனை கண்டுபிடிக்க வரும் பகத் பாசில் பலரிடம் நடத்தும் விசாரணையில் நடிகர் கமலஹாசன் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவார். தனது சரக்கை மீண்டும் பிடிப்பதற்காக விஜய் சேதுபதி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் படத்தில் அட்டகாசமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பகத் பாசில் விஜய் சேதுபதியின் வீட்டை வெடி வைத்து தகர்ப்பதும் அதற்குப் பழி வாங்கும் வகையில் அவரது காதலியை விஜய் சேதுபதி கொலை செய்வதெல்லாம் அருமையாக இருக்கும். மேலும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது பேரனை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளும், கடைசியாக கேஜிஎப் திரைப்படத்தில் வருவதை போல பழைய ஆட்டோமேட்டிக் கண்ணை எடுத்துக் கொண்டு வந்து அனைவரையும் சுட்டு வீழ்த்துவது எல்லாம் அமோகமாக இருந்தது.

மேலும் இப்படத்தின் கடைசியில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யாவை கொண்டு வந்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். மேலும், கைதி, லியோ என அனைத்து படங்களையும் இதனுடன் இணைத்து காண்பித்திருப்பார் லோகேஷ் கனகராஜ். இப்படி, முழுக்க முழுக்க இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனை லோகேஷ் கனகராஜ் ரசித்தாரோ இல்லையோ, ரசிகர்கள் ரசித்தார்களோ இல்லையோ கமலஹாசனே தன்னைப் பார்த்து ரசித்த திரைப்படம் தான் இந்த விக்ரம் திரைப்படம்.

ரஜினிக்கு எப்படி நெல்சன் திலீப்குமார் "ஜெயிலர்" என மாஸ் ஹிட் படம் கொடுத்தாரோ, அதே போல் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கொடுத்தார். ஜெயிலர் வெற்றிக்காக நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் கார் கொடுத்தது போல், விக்ரம் ரூ.600கோடிக்கு மேல் வசூல் செய்ததற்காக கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜிக்கு காஸ்லி காரை பரிசாக கொடுத்தார். 

இப்படி அனைவரும் பார்த்து ரசித்த விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இப்படம் கடந்த மே மாதம் 30ம் தேதி ஜப்பானில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இந்த படத்தை ஜப்பான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை இப்படம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தை தொடர்ந்து லோகேஷின் லியோ படத்தை ஜப்பானில் வெளியிட உள்ளனர் படக்குழுவினர். 


 

இதையும் படிங்க: என்ன சாமி இப்படியாகிப்போச்சு..! தக் லைஃப் படத்தை வெளியிட கர்நாடக வர்த்தக சபை சம்மதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share