குழந்தைக்கு பாலூட்டிய ஸ்ரீநிதி ஷெட்டி புகைப்படம்..! ஒரே பதிவில் விமர்சனங்களை காலி செய்த ஸ்மார்ட் நடிகை..!
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம் வைரலானதை அடுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய திரை உலகில் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் என்றால் அவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கே.ஜி.எப் படத்தில் 'ராக்கி'யுடன் இணைந்து நடித்ததன் மூலம் இந்திய அளவில் ஒரு பிரபலமான முகமாக மாறினார். அதன்பின் 2018-ம் ஆண்டு வெளியான 'K.G.F: Chapter 1' மற்றும் அதன் தொடர்ச்சியாக 2022-ல் வெளியான 'K.G.F: Chapter 2' ஆகிய இரு படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் கொடுத்தது. இந்தப் படங்களில் அவரது 'ரீனா' கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஸ்ரீநிதி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியுடன் நடித்த 'HIT: The Third Case' படத்தின் மூலமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றார்.
இப்படம் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூலித்தது. இதில் ஸ்ரீநிதி நடித்த கேரக்டர் பாராட்டை பெற்றதோடு, அவரது நடிப்புத் திறமையை வலியுறுத்தும் விதமாக இருந்தது. தற்போது ஸ்ரீநிதி நடித்து வரும் புதிய படம் 'புலாசா காடா'. இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இது ஒரு பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் படம் என கூறப்படுகிறது. படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், கதையின் நகர்வு குறித்ததான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கைக் குழந்தையை மடியில் வைத்து பாலூட்டும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் எடுக்கப்பட்ட விதம் மற்றும் ஸ்ரீநிதியின் முகபாவனைகள், அதை சுற்றியுள்ள சூழ்நிலை என அனைத்தும் மிகுந்த அளவில் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வை தரக்கூடியதாக இருந்தது. இவை இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கின. இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்தன. பலர், ஸ்ரீநிதிக்கு எப்போ திருமணம் ஆச்சு?, அவருக்கு குழந்தை இருக்கிறதா?, இந்த புகைப்படம் உண்மையா? எனக் பல கேள்விகளை எழுப்பினர். சிலர் நேரடியாக விமர்சனங்களாகவும் கமெண்ட் செய்தனர்.
இதையும் படிங்க: ஸ்லிம் லுக்கில் கலக்கும் நடிகை சமந்தா..! டயட் பற்றிய ரகசியங்களை சிதறவிட்ட "Neighbors".!
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நான் எழுந்த போது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள். நான்தான் சிறந்த அத்தை" என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பாசமான மற்றும் நேர்மையான விளக்கம் என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இது உண்மையில் ஸ்ரீநிதியின் சகோதரியின் குழந்தை என்று நம்பப்படுகிறது. பலரும் “அத்தையை விட தாயாகவே அவருக்கு affection இருக்கிறது” என்று குறிப்பிட்டு, ஸ்ரீநிதியின் பாசத்தை புகழ்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் மூலம் ஸ்ரீநிதி மீதான ரசிகர்கள் நம்பிக்கையும், மதிப்பும் மேலும் உயர்ந்துள்ளன.
இப்படியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது வாழ்க்கையிலும், தனது சமூக அனுபவங்களிலும் மனித நேயம், எளிமை மற்றும் பாசம் ஆகியவற்றை பின்பற்றி வருபவர் என்பதை இந்த நிகழ்வும் நிரூபிக்கிறது. ஒரு புகைப்படம் மூலம் உருவான குழப்பம், அவரது பதிலின் மூலம் தெளிவாகி உள்ளது.
இதையும் படிங்க: சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை...! தயாரிப்பு சிக்கலால் தற்காலிகமாக நிறுத்தமா..?