விஜே சித்து இயக்கும் புதிய படம்..! அனௌன்ஸ்மண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!
விஜே சித்து இயக்கும் புதியப்படத்திற்கான அனௌன்ஸ்மாண்ட் வீடியோ வெளியானது.
தற்பொழுது பல பேர் யூடியூபில் ஃபேமஸ் ஆகி வருகின்றனர் ஆனால் யுடியூப்பையே ஃபேமஸ் ஆக்கியது என்றால் எங்கள் அண்ணன் விஜேசித்து தான் என பலபேர் கூறும் அளவிற்கு இன்று அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்து உள்ளார் சித்து. ஆரம்பத்தில் வழி செலவுக்கு கூட பணம் இல்லாமல் சென்னைக்கு வந்த விஜே சித்து. தனது பயணத்தை யுடியூப்பில் இருந்து ஆரம்பித்தார். பிளாக் ஷிப் என்ற யுடியூப் சேனலில் சேர்ந்த சித்து பல நாட்களாக கேமராவில் தெரியப்படாத மனிதராகவே இருந்தார்.
பின்பு "ஃபன் பண்றோம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஷெரிப் அந்தச் சான்ஸை சித்துவுக்கு கொடுக்க, அதில் தனது முழு திறமையை காமித்த சித்துவின் நகைச்சுவை, பேசும் திறமை, பிராங்கிள் புதிய யுக்தி ஆகியவை மக்களுக்கு பிடித்த போக, 'ஃபன் பண்றோம்' நிகழ்ச்சி என்றால் அது 'வி.ஜே சித்து' தான் என்ற பெயர் மக்கள் மத்தியில் அடிபட தொடங்கியது. பல ஆயிரக்கணக்கான 'ஃபன் பண்றோம்' ஷோக்களை நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் சித்து.
இதையும் படிங்க: ரகசியமாக திருமணம் செய்த பிரியங்கா தேஷ் பாண்டே..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இதனை அடுத்து, குறும்படங்களில் நடித்த சித்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் பெருக ஆரம்பித்தது. ஒரு நாள் திடீரென "வி.ஜே.சித்து விலாக்ஸ்" என்ற யுடியூப் சேனலை உருவாக்கினார். அதில் அவருடன் ஹர்ஷத் கான் மற்றும் கேமரா மேன் சூரி ஆகியோர் மட்டும் தொடக்கத்தில் இருந்தனர். வீடியோக்கள் ஒவ்வொன்றாய் செல்ல செல்ல இவர்களது யூடியூபில் சப்ஸ்கிரைப்ர்களும் பெருக ஆரம்பித்தனர். விலாக்சில் காமெடியை புகுத்தி ஆண் நண்பர்கள் இணைந்தால் அந்த ட்ரிப் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்கும் அளவிற்கு இவர்களது வீடியோ இருப்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
யுடியூப் வரலாற்றிலேயே அதிக சப்ஸ்க்ரைபர் வந்ததற்காக தனது சப்ஸ்க்ரைபர்களை அழைத்து பிரியாணி போட்ட ஒரே சேனல் இவர்களாகத்தான் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களது பார்வையாளர்கள் பெருகும் அளவிற்கு சித்து விலாக்சின் அலுவலகமும் வளர்ந்து ஆட்களும் பெருகி உள்ளனர். இவர்கள் சேனலில் இவர்கள் நடத்தும் மொட்டை மாடி நிகழ்ச்சியில், யோகி பாபு, ரவி மோகன், ஹிப் ஹாப் ஆதி, பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து என பலரையும் அழைத்து வந்து மக்களை அவர்களுடைய சேனலை பார்க்க வைத்தனர்.
இப்படி யூடியூபில் வலம் வந்த சித்து, திடீரென வெள்ளித்திரையில் தோன்றுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் அஸ்வத்மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நெருங்கிய நண்பனாக அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சித்து. இந்தப் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரை கொண்டாடிய ரசிகர்களும் பலராய் இருந்தனர்.
இந்த சூழலில் இனி சித்து அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நமக்கு நடிக்க மட்டும் இன்ட்ரஸ்ட் இல்ல படம் எழுதி இயக்கவும் இண்ட்ரெஸ்ட் என்பதை ஒரே வீடியோவில் காண்பித்து உள்ளார் சித்து.
அதன்படி வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேசன் தயாரிப்பில் விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க உள்ள திரைப்படம் "டயங்கரம்". இந்தப் படத்திற்கு உண்டான அட்டகாசமான அனவுன்ஸ்மென்ட் வீடியோவை தனது youtube சேனலில் பதிவேற்றம் செய்த சித்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: ஹிட் கொடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்..! ஒரே நாள் வசூலில் சாதனை..!