உழைப்பெல்லாம் வீணா போச்சே..! “காந்தாரா” படக்காட்சியில் சிக்கிய தண்ணீர் கேன்..கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
“காந்தாரா” படக்காட்சியில் சிக்கிய தண்ணீர் கேன்-னை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கன்னட திரைப்பட உலகில் மறக்க முடியாத மைல் கல்லாக இருந்தது “காந்தாரா”. 2022ல் வெளியான அந்த திரைப்படம், கர்நாடகா மட்டுமின்றி முழு இந்திய அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படி மனிதன் மற்றும் இயற்கை, மதம் மற்றும் நம்பிக்கை, மன்னர் மற்றும் மக்களிடையிலான உறவைத் தொட்ட அந்த கதை, கலைநயத்திலும் தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மயக்கியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா: சாப்டர் 1” என்ற பெயரில் புதிய கதையுடன் மீண்டும் ரசிகர்களை நோக்கி வந்துள்ளார்.
இப்படி இருக்க “காந்தாரா சாப்டர் 1” திரைப்படம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதே நிறுவனம் “கே.ஜி.எப்” மற்றும் “சலார்” போன்ற பிளாக்பஸ்டர் படங்களையும் தயாரித்துள்ளது. ரிஷப் ஷெட்டி தான் இப்படத்தின் இயக்குநரும் கதாநாயகரும் ஆவார். அவருடன் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், முதல் பாகத்தில் போலவே இந்தப் படத்திற்கும் தன்னுடைய மாயமான இசையால் உயிர் ஊட்டியுள்ளார். “காந்தாரா சாப்டர் 1” படம், 4ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அமைந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கதையில், பழங்குடி மக்கள், மன்னர் வாரிசுகள், கடவுளின் கோபம், தெய்வ வழிபாடு, மனித ஆசை ஆகியவை கலந்துள்ளன. ரிஷப் ஷெட்டி ஒரு குடி வீரராக, தன் மக்கள் மற்றும் தெய்வத்தின் நம்பிக்கையை காப்பாற்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் கலைநயம், காட்சிக் களம், ஆடை அலங்காரம், கலாச்சார கூறுகள் அனைத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இப்படியாக திரைப்படம் வெளியானதும் ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக திரண்டனர். பெரும்பாலான திரையரங்குகளில் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் ஹவுஸ் ஃபுல் ஆனது. படக்குழு வெளியிட்ட தரவின்படி, “காந்தாரா சாப்டர் 1” வெறும் ஒரு வாரத்தில் ரூ.509.25 கோடி வசூல் செய்துள்ளது. இது கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல், இந்திய சினிமா வரலாற்றிலும் முக்கியமான சாதனையாகும். படத்தில் இடம்பெற்றுள்ள “பிரம்ம கலாஷா” பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் காட்சியில், பழங்குடி மக்கள் தெய்வ வழிபாட்டை நடத்தியபோது, அதிர்ச்சியூட்டும் ஒரு பிழை ரசிகர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் 3 நிமிடம் 6 வது நொடியில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் கேன் காட்சி வெளிப்படையாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அந்த காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: அக்டோபர் முதல் வாரம் சினிமா ரசிகர்களின் பொற்காலம்..! அதிரடியாக ரிலீசாகும் மூன்று முக்கிய படங்கள்..!
அதில், “400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையில் தண்ணீர் கேன் வந்தது எப்படி?” எனவும் “காந்தாரா சாப்டர் 1 ஒரு மாஸ்டர் பீஸ் தான், ஆனால் இந்த கேன் சின்ன தவறை மறக்க முடியாது” என பதிவிட்டு வருகின்றனர். இந்தக் காட்சி தற்போது தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள், இப்படியொரு பெரிய அளவிலான வரலாற்று படத்தில் இத்தகைய பிழை எப்படி நடந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தண்ணீர் கேன் பிழை குறித்த விவாதம் இருந்தாலும், “காந்தாரா சாப்டர் 1” திரைப்படம் இன்னும் மாபெரும் கலைக்கட்டுமானமாக பாராட்டப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவு, ரிஷப் ஷெட்டியின் நடிப்பு, இசை, திரைக்கதை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ருக்மணி வசந்தின் கதாபாத்திரம், பெண் சக்தியின் அடையாளமாக பலரால் பாராட்டப்படுகிறது.
தண்ணீர் கேன் காட்சி வெளியான பிறகு, மீம்ஸ் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். ஒரு மீமில், “காந்தாரா டைம் டிராவல் வெர்சன்” என்று எழுதப்பட்டு தண்ணீர் கேன் காட்சி சேர்க்கப்பட்டிருந்தது. மற்றொரு மீமில் “இது கடவுள் கொடுத்த ஈஸ்டர் எக்” என்று நகைச்சுவையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மீம்கள் ரசிகர்களுக்கு சிரிப்பைத் தந்தாலும், சிலருக்கு இது “மாஸ்டர் பீஸில் ஒரு சிறிய கறை” என்று தோன்றியுள்ளது. இத்தகைய பிழைகள் இந்திய சினிமாவில் புதிதல்ல. முன்னதாக “பாகுபலி”, “பொன்னியின்செல்வன்”, “ஆர்ஆர்ஆர்” போன்ற படங்களிலும் சிறிய காலபிழைகள் ரசிகர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் “காந்தாரா சாப்டர் 1” போல பழங்காலத்தின் மையத்தில் அமைந்த படத்தில் பிளாஸ்டிக் கேன் காணப்பட்டிருப்பது ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் அந்தக் காட்சியை திரையரங்க வெளியீட்டில் இருந்து நீக்குவது அல்லது ஓடிடி வெளியீட்டில் திருத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடி வெளியீட்டில் அந்த பிழை சரிசெய்யப்பட்டு வரும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. ஆகவே “காந்தாரா சாப்டர் 1” என்பது கன்னட சினிமாவின் கலாச்சார பெருமையை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய திரைப்படமாகும். தண்ணீர் கேன் பிழை ஒரு சிறிய குறைபாடாக இருந்தாலும், அதனால் படத்தின் மொத்த தாக்கம் பாதிக்கப்படவில்லை.
ரிஷப் ஷெட்டி தனது கலைக்கண்ணோட்டத்தால் இந்திய சினிமாவை ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளார். திரைப்படம் வசூலில் புது சாதனை படைத்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் கூறும் நகைச்சுவை விமர்சனங்களும் சமூக வலைதளங்களிலும் ஓயாமல் ஒலிக்கின்றன.
இதையும் படிங்க: குடிச்சா தியேட்டர்-ல Not Allowed...! 'காந்தாரா' படம் பார்க்க வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த படக்குழு..!