×
 

எங்களை பத்தி படம் எடுப்பீங்க.. ஆனா பங்கு தரமாட்டீங்களா..! ‘துரந்தர்-2’ வசூல்.. பாகிஸ்தான் மக்களின் கோரிக்கையால் வெடித்த சர்ச்சை..!

‘துரந்தர்-2’ ரூ.1,200 கோடி வசூல் வெற்றிக்கு இடையில் பாகிஸ்தான் மக்கள் ரூ.500 கோடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை கொடுத்தார்.

இந்திய திரைப்பட உலகில் சமீபகாலத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் வெற்றியையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ள படம் ‘துரந்தர்-2’. ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆர். மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் பெரும் அலை எழுப்பி வருகிறது. மெகா ஆக்ஷன், சமூக அரசியல் பின்னணி, உண்மை சம்பவங்களை ஒட்டிய கதை ஆகியவை சேர்ந்த இந்த படம், இந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் வசூல் தற்போது ரூ.1,200 கோடிகளைத் தாண்டி பறக்கிறது. ஹிந்தி சினிமா வரலாற்றில் மிக வேகமாக ரூ.1,000 கோடி கிளப்பில் சேர்ந்த படமாகவும் இது அடையாளம் பெற்றுள்ளது. ஆனால் இந்த பெரும் வெற்றிக்குள் ஒரு புதிய சர்ச்சையும் உருவாகியுள்ளது. அதற்குப் பின்னணி பாகிஸ்தானின் லயாரி பகுதி. கராச்சியில் உள்ள லயாரி பகுதி, பாகிஸ்தானின் மிக பழமையான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று. அங்கே பல ஆண்டுகளாக சமூக கலகம், வன்முறை, குற்றசெயல்கள், போர் போன்றவை நடைபெற்றுள்ளது. லயாரி பகுதியை மையமாக வைத்து உருவான கதையே ‘துரந்தர்-2’ படத்தின் அடிப்படை.

குறிப்பாக, லயாரியில் நடைபெறும் சட்டவிரோத கும்பல்கள், போதைப் பொருள் மாஃபியா, அரசியல் ஆதரவு பெற்ற கும்பல் போர்கள், வன்முறை கலவரங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே படத்தின் கதாபாத்திரங்களும் கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகைகளுக்கு அதிக விமர்சனங்கள் வருகிறது… பாராட்டவில்லை என்றாலும் விமர்சிக்காமல் இருங்கள் – நிதி அகர்வாலின் நேர்காணல் வைரல்!

இதனால் படம் வெளியான பிறகு பாகிஸ்தானில் இருந்தே கடும் எதிர்ப்பும், அதே நேரத்தில் படம் உண்மைச் சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கான பாராட்டும் ஒரே நேரத்தில் எழுந்தன. இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்களை மட்டுமல்லாமல் முழு இணையத்தையே கவனிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் லயாரி பகுதி மக்கள் கூறுவது “லயாரியைப் பின்னணியாக கொண்டு படம் எடுத்து ரூ.1,200 கோடி சம்பாதித்திருக்கிறார்கள். எங்கள் பகுதி மக்களின் கதைகளை வைத்து லாபம் பார்க்கின்றார்கள் என்றால், குறைந்தது ரூ.500 கோடி ரூபாய் எங்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த பணத்தை கொண்டு லயாரியில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், அடிப்படை அடுக்குமாடி வசதிகள் செய்வோம்”

அவர்களின் இந்த கருத்துக்கள் நெட்டிசன்களிடையே ஒரு பெரிய விவாதத்தை கிளப்பி வருகிறது. "உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுக்கலாம்… ஆனால் லாபத்தில் நாங்களுக்கும் பங்கு!" என்னும் கோரிக்கை இதற்கு முன்பு உலக சினிமாவில் அரிதானது. லயாரி மக்களின் இந்த கோரிக்கைக்கு இந்திய நெட்டிசன்களும் ரசிகர்களும் தங்களுக்கே உரித்தான முறையில் பதில் அளித்து வருகின்றனர்.

அவர்கள் கூறுவது,  “ரூ.500 கோடி வேண்டுமாம்… கொடுக்கலாம்… ஆனால் ஒரு நிபந்தனை.. லயாரியில் கட்டப்படும் புதிய சாலைகளுக்கு பெயர் ரன்வீர் சிங் ரோடு, மாதவன் நகர், துரந்தர் சாலா என்று வைக்க வேண்டும். இப்படம் இந்திய சினிமாவின் படம்… லயாரியின் பெயரை உலகம் அறிய வைத்திருக்கிறது… அதற்காக நன்றி சொல்லாமல் பணம் கேட்கிறீர்களே?” என்றார். இந்த கமெண்ட்கள் பல ஆயிரங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக எக்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் ஆகியவற்றில் இந்தியர்களின் மீம்ஸ்கள், கமெண்ட்களும் லயாரி மக்களின் கோரிக்கையை கேலி செய்யும் விதமாக பரவி வருகின்றன. ‘துரந்தர்-2’ படக்குழு இதுவரை இந்த சர்ச்சைக்கு எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை. அதனால் விவாதம் இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சினிமா வட்டாரங்களில் லயாரி பகுதி மக்கள் கோரிய 500 கோடி என்பது முற்றிலும் அசாத்யமானது, படம் உண்மை சம்பவம் அடிப்படையில் இருந்தாலும், கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஃபிக்ஷன், ஒரு பகுதியை மையமாக வைத்து படம் எடுத்தால், அந்த பகுதி மக்களுக்கு லாபம் தரவேண்டும் என்ற சட்டம் கிடையாது என்று.

ஆனால் லயாரி மக்களுக்கு, இது திரைப்படம் சம்பாதித்த லாபத்தில் பங்கு வேண்டுமென்பதல்ல.. அவர்கள் decades-ஆக எதிர்கொண்டு வரும் வறுமை, அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகியவற்றை உலகத்திற்கு சொல்ல வேண்டிய தேவையாகவே இது பார்க்கப்படுகின்றது. இந்த கோரிக்கைக்கு பின்னர் இந்தியர்கள் கூறும் கருத்துகளில் பெரும்பாலானவை நகைச்சுவை மற்றும் கிண்டல் கலந்து இருக்கின்றன. சிலர், இந்தியாவின் பல பகுதிகளிலும் சாலை பிரச்சினைகள் உள்ளன; அதைக் களைந்துவிட்டு லயாரிக்கு 500 கோடி கொடுக்க முடியாது என்று பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், “லயாரி மக்களின் நலன் குறித்து படம் ஆதரவு அளிக்கலாம்”, “ஒரு அறக்கட்டளை அமைத்து உதவி செய்யலாம்” என்று மென்மையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் பெரும்பாலும், இது இரு நாடுகளின் ரசிகர்கள் இடையேயான நகைச்சுவை மோதலாகவே மாறி வருகிறது. 'துரந்தர்-2' படத்தின் தரமும் வசூலும் ஏற்கனவே சினிமா உலகத்தில் பெரும் சாதனை செய்துவிட்டது. ஆனால் லயாரி மக்களின் ரூ.500 கோடி கோரிக்கை இந்த வெற்றிக்குள் ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் இன்னும் எவ்வாறு திரும்பும் என்பது தெரியாது. ஆனால் இந்த விவாதம் சமூக வலைதளங்களில் இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மீண்டும் ஒரு சின்ன மோதலை உருவாக்கியிருப்பது மட்டும் உறுதி.

இதையும் படிங்க: அரசியல் கலந்த காமெடி எண்டர்டெயினராக களமிறங்கும் நட்டி நட்ராஜ்..! ‘தங்க நட்சத்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share