×
 
☰

நவராத்திரி ஸ்பெஷல் லுக்கில் ஆலியா பட்.!! பாரம்பரிய உடையில் அசத்தும் பாலிவுட் அழகி..!

நடிகை ஆலியா பட் நவராத்திரி ஸ்பெஷல் லுக்கில் இருக்கும் போட்டோஸ் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


நவீன உடைகளில் மட்டுமின்றி, பாரம்பரிய ஆடைகளிலும் தனித்துவமான தோற்றத்துடன் வலம் வரும் ஆலியா பட், இந்தப் புகைப்படங்களின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.

ஏற்கெனவே சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள அவருடைய ஒவ்வொரு புதிய புகைப்படமும் இணையத்தில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: ‘மஹாசக்தி’ அவதாரத்தில் நயன்தாரா..! ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’...  பூஜை சிறப்பு போஸ்டர் ரிலீஸ்..!

இந்தியத் திரையுலகில் இளம் வயதிலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான இவர், திரைப்படப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது நடிப்புத் திறமை மற்றும் கதைத்தேர்வின் மூலம் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.


2012ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஆலியா பட், தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

காதல் கதைகள், குடும்பப் பின்னணியிலான படங்கள், உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் எனப் பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக, ‘ஹைவே’, ‘உட்தா பஞ்சாப்’, ‘ராஸி’, ‘கங்குபாய் கத்தியாவாடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவரது பலமாகப் பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களில் மட்டுமின்றி, ஆடை அலங்காரம் மற்றும் அழகுக் குறிப்புகள் தொடர்பான நிகழ்வுகளிலும் ஆலியா பட் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். 

இதையும் படிங்க: அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தாரா ஜோதிடர்..!! தனுஷ் குறித்தும் அப்போதே சொன்ன ஆருடம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share