×
 

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. படத்துக்காக இதெல்லாம் செய்யறாரா..?

அருண் மாதீஸ்வரன் இயக்கும் புது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். தற்போது அவரது புதிய படமான 'கூலி' (Coolie), ரஜினிகாந்த் நடிப்பில், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் மற்றும் ஆமிர் கான் (சிறப்பு தோற்றத்தில்) நடிக்கின்றனர். இப்படம் லோகேஷின் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) உடன் இணையாது என்று முதலில் கூறப்பட்டாலும், நடிகர் நரேனுடன் 'கூலி' நடிகர்களின் புகைப்படம் வெளியாகி LCU உடன் இணைப்பு குறித்து விவாதங்களைத் தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு NO..! கமல் மன்னிப்பு கேட்காமல் படம் ஓடாது - நீதிபதி திட்டவட்டம்..!

பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ள லோகேஷ் கனகராஜ், தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். ஒருபக்கம் இயக்குனர், தயாரிப்பாளர் என செம பிசியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாகவும் களமிறங்க இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஸ்ருதிஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் லோகேஷ். 

ராக்கி, சானி காகிதம், கேப்டன் மில்லர் என அதிரடி ஆக்ஷன் படங்களாக இயக்கியவர் தான் அருண் மாதீஸ்வரன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் தற்போது லோகேஷ் கனகராஜை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் அருண் மாதீஸ்வரன்.

அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாக உள்ளதால் அதற்காக தற்போது லோகேஷ் தற்காப்பு கலைகளை (MARTIAL ARTS) கற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இந்த தகவலை கேட்டு எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: குஜராத் துயரச் சம்பவம்: மனம் நொந்து போன பிரியங்கா சோப்ரா.. வேதனையில் போட்ட பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share