×
 

திரையுலகமே பேரதிர்ச்சி... பிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்...!

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் வி. சேகர் காலமானார். 

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் வி. சேகர் காலமானார். 

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக வலம் வந்தவர் வி.சேகர். குறிப்பாக 90 காலகட்டத்தில் குடும்ப விஷயங்களை அவர் எடுத்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. "நீங்களும் ஹீரோதான் " என்ற திரைப்படத்தில் நிழல்கள் ரவியை ஹீரோவாக வைத்து தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

அதற்கு பிறகு ஏராளமான படங்களை இயக்கினார். "காலம் மாறி போச்சு", "விரலுக்கு ஏத்து வீக்கம் " , "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "வரவு எட்டனா செலவு பத்தனா", "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" போன்ற குடும்ப பாங்கான படங்களை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: அழகிய மேனியின் மேல் போர்த்தப்பட்ட சேலை..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கலக்கல் கிளிக்ஸ்..!

வடிவேலையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமை வி.சேகருக்கு உண்டு. 1980, 90களில் குடும்பத்தில் நடக்கும் போராட்டங்கள், சண்டை, சச்சரவுகள், காதல் உள்ளிட்ட அனைத்து ரசங்களையும் சேர்த்து குடும்பங்கள் போற்றும் படத்தை எடுத்துள்ளார். இவரது படத்தில் ஆபாசத்திற்கு இடம் இருக்காது என்பதால், இவரது படங்கள் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது. கூட்டுக் குடும்பம், கணவன் மனைவி பிரச்சினைகள், நடுத்தர வர்க்கத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை இவரது படங்கள் பேசியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போரூரில் இருக்கக்கூடிய ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் செல்லாமல் இருப்பதால் அவர் கண்களை மூடிய நிலையிலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

கடந்த 10 நாட்களாக அவர் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். இயக்குனர் வி.சேகரின் மரண செய்தி அறிந்த திரை உலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கவர்ச்சியூட்டும் கண்கள்.. சிலிர்க்க வைக்கும் உதடு..! இடுப்பு மடிப்பில் சிதறவிடும் நடிகை ராசி கண்ணா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share