×
 

கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

பின்னர் லகான், சர்ஃபரோஷ் போன்ற இந்திப் படங்களில் கவனம் பெற்றார். 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் மிரட்டிய பிரபல நடிகர் பிரதீப் ராவத் (74) நேற்று (ஆகஸ்ட் 4) மாலை காலமானார். இரத்தப் புற்றுநோய் மீண்டும் தாக்கியதால், கடந்த ஒரு மாதமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மேலாளர் சித்தார்த் திவாரி உறுதிப்படுத்திய இந்தச் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு இன்று (ஆகஸ்ட் 5) நடைபெறும் என்று தெரிகிறது. 

1952ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர். சோப்ராவின் தொலைக்காட்சித் தொடரான ‘மகாபாரதம்’ தொடரில் அஸ்வத்தாமா வேடத்தில் நடித்து முதன்முதலில் அறியப்பட்டார். பின்னர் லகான், சர்ஃபரோஷ் போன்ற இந்திப் படங்களில் கவனம் பெற்றார். 

தமிழ் சினிமாவில் சிலம்பரசன் நடித்த ‘தொட்டி ஜெயா’ படத்தில் சீனா தானா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘கஜினி’ படத்தில் டபுள் ரோலில் (ராம்-லட்சுமண்) நடித்து ரசிகர்களை மிரட்டினார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘வாத்தியார்’, ‘அசல்’, ‘ராஜபாட்டை’, ‘ஜில்லா’, ‘வீரம்’, ‘ஆம்பள’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் கறிக்கடை மாமா நினைவிருக்கா..!! நடிகர் VC ஜெயமணி காலமானார்..!!

தெலுங்கு சினிமாவில் ‘ஸை’ படத்தில் பிக்ஷு யாதவ் வேடத்தில் நடித்து பிலிம்பேர் சிறந்த வில்லன் விருது பெற்றார். சத்ரபதி, ஸ்டாலின், தெசமுதூரு உள்ளிட்ட பல படங்களிலும் அவர் இடம்பெற்றார். கன்னடம், மலையாளம், இந்தி, நேபாளி மொழிகளிலும் நடித்த பன்மொழி நடிகராக அவர் அறியப்பட்டார். நான்கு தசாப்த கால நடிப்பு வாழ்க்கையில் கடுமையான வில்லன் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த பிரதீப் ராவத்தின் மறைவுக்கு திரையுலக நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வரான் பாரு வேட்டைக்காரன்..!! உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்துல ‘முதல்வர் விஜயை’ பாராட்டிய சிபி சத்யராஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share