×
 

அஜித் ஜாதகத்தில் உச்சத்தில் குரு... ஆல் ஏரியா கில்லி..! AK-வின் மறுபக்கம்..!

தனியார் ஜெட்டின் மதிப்பு 25 கோடி ரூபாய், லட்சக்கணக்கான மதிப்புள்ள பைக்குகள், கோடிக்கணக்கான விலையுயர்ந்த கார் கலெக்சன்களும் அரிடம் உண்டு.

பிறர் உதவியின்றி காட்டுமரமாய் தமிழ் சினிமாவில் வேரூன்றியவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். தனக்கு பிடித்ததை செய்யும் அவரது வாழ்க்கையே பலருக்கு ஆதர்சம். சினிமா வட்டாரத்தில் மிஸ்டர் ஸ்டைல். கிராண்ட் மாஸ் ஓபனிங்கில் அவர் எப்போதும் தல. வாழ்க்கையில் ஜெயிக்க நினைபவர்களுக்கோ, தோல்வியால் துவண்டவர்களுக்கோ, அஜித் ஒரு முன்னோடி. பட்ட கஷ்ட்டங்களோ ஏராளம், ஆனாலும் இவர் மனம் தாராளம். முதுகில் குத்தியவர்களுக்கும், தானே முன்வந்து உதவக்கூடியவர். அழிக்க நினைத்தவர்களுக்கும், வாழ்க்கை கொடுத்த உத்தமர். குடும்பம்- சினிமா - கார் ரேஸ் என ஆல் ஏரியாவிலும் கில்லி.

தீவிர சாய்பாபா பக்தர். புதிதாக கார், பைக் எது வாங்கினாலும் சாய்பாபாவின் பெயரை மெலிதாய் உச்சரித்துவிட்டுத் தான் உபயோகிக்கத் தொடங்குவார். திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம் பிடித்த விஷயம். பிரபலத்தைக் கொஞ்சமும் பயன்படுத்தாமல் கீழ் திருப்பதியிலிருந்து மேலே திருமலைக்கு நடந்தே செல்வார். கோயில் அதிகாரிகள் சலுகைகள் தந்தாலும் மறுத்து பொதுமக்களுடன் செல்வதை விரும்புவார்.

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் ஷாலினிதான் காரணம்..! தன் மனைவியை இப்படி சொல்லிட்டாரே அஜித்..!

15 வருடங்களுக்கு முன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற நாள்களும் உண்டு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாட வீட்டிலேயே ஷட்டில் கோர்ட் அமைத்திருக்கிறார். மனைவி ஷாலினியும் மகள் அனோஷ்காவும் சக பிளேயர்கள். வீட்டில் பாத்திரங்களை சுத்தம் செய்வதைக்கூட சலிக்காமல் செய்வார். தன் வீட்டில் நெடுங்காலமாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை அவர்களுக்கே பத்திரப்பதிவும் செய்து கொடுத்துவிட்டார்.

கலைப் பொருள்கள் மீது பெரும் தாகம் கொண்டவர். ரேஸ் டிராக்கிற்குப் பிறகு மியூசியங்களில் அதிகம் பார்க்கலாம். பல்வேறு நாடுகளின் நாணயங்கள், அதிநவீன கேமரா, மினியேச்சர் ஹெல்மெட்டுகள், தபால் தலைகள், விதவிதமான கைக்கடிகாரங்கள் அவரது சேமிப்பில் இருக்கின்றன. விதவிதமான பைக்குகளைச் சேகரிப்பதும் பிடிக்கும். 

அஜித்திடம் உள்ள சொத்தின் நிகர மதிப்பு ₹350.  அவரிடம் உள்ள தனியார் ஜெட்டின் மதிப்பு 25 கோடி ரூபாய், லட்சக்கணக்கான மதிப்புள்ள பைக்குகள், கோடிக்கணக்கான விலையுயர்ந்த கார் கலெக்சன்களும் அரிடம் உண்டு.

அஜித் குமார் ஒரு படத்திற்கு ரூ.105 கோடி முதல் ரூ.165 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார். ஒரு சிறந்த நடிகராக இருப்பதைப்போலவே தொழில்முறை கார் பந்தய வீரரும் கூட. ஏ.கே கார்களை மிகவும் விரும்புகிறார்.சென்னையில், திருவான்மியூரில் உள்ள அவரது ஆடம்பர வீட்டின் மதிப்பு ரூ.12 முதல் 15 கோடி. கடற்கரையில் கட்டப்பட்ட அஜித்தின் பங்களாவில் நீச்சல் குளம், உயர் தொழில்நுட்ப உடற்பயிற்சி கூடமும் அடக்கம்.

அஜித்  ஒரு பைக் பிரியர். அஜித் BMW S1000 RR, Aprilia Caponord மற்றும் BMW K1300 S உள்ளிட்ட பல காஸ்ட்லி பைக்குகளை  வைத்திருக்கிறார். அவற்றின் விலை ரூ.10-15 லட்சம் வரை.மோட்டார் ஸ்போர்ட்ஸை விரும்பும் அஜித், ஆடம்பர கார்களின் பிரியரும்கூட. ரூ.36 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இதில் ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, பி.எம்.டபிள்யூ- 7 சீரிஸ் ஆகியவை அடங்கும்.

தமிழக இளைஞர்களின் தன்னம்பிக்கை நாயகன், உழைப்பால் எந்த வெற்றியையும் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்த சாதனையாளர், பாரத தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை பெற்றிருக்கும் அஜித் குமார் தற்போது சிறந்த நடிகர் விருதுக்காவும் தேர்ந்தெடுகப்பட்டுள்ளார்.


 

இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித் கண்டனம்..! மத்திய அரசுக்கு புதிய வேண்டுகோள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share