ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு.. குடும்ப நல நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் செப்.30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரபல பாடகி சைந்தவி ஆகியோர் விவாகரத்து கோரிய வழக்கில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் இம்மாதம் 30ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2024-இல் பிரிவை அறிவித்து, இருவரும் பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்தனர். இன்றைய விசாரணையில் இருவரும் தனிப்பட்ட முறையில் ஆஜராகினர். அப்போது இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், பிள்ளை அன்வியின் நலனைப் பாதுகாக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தனர்.
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த மோகன் ஜியின் “திரௌபதி 2”..! படப்பிடிப்பு பணி நிறைவு என அறிவித்த படக்குழு..!
மேலும் நீதிபதி செல்வ சுந்தரி முன்பு குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.
இந்தத் தம்பதியினர் பள்ளி நாட்களில் இருந்தே நட்பாக பழகி பின்னர் காதலாக மாறி, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஏ.ஆர். ரஹ்மானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ், 'அசுரன்', 'சூரரைப்போற்று' போன்ற படங்களுக்கான இசையால் புகழ் பெற்றவர். சைந்தவி, ஜி.வி.பிரகாஷின் இசைக்கு பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்.
அன்வி பிறந்த பிறகு, தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. 2024 மே மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இது நாங்கள் எடுத்த சிறந்த முடிவு" என்று கூறினர். சைந்தவி, "வெளிப்புற சக்திகளால் அல்ல, நாங்கள் சிறந்த நண்பர்கள்" என விளக்கினார். பிரிவு அறிவிப்புக்குப் பின், நடிகை திவ்யபாரதி உடனான உறவு வதந்திகள் பரவின. 'பேச்சுலர்' படத்தில் இணைந்த பிரகாஷ்-திவ்யபாரதி, 'கிங்ஸ்டன்' படத்திலும் ஒன்றாகினர். திவ்யபாரதி, "நான் நடிகர்களை டேட் செய்ய மாட்டேன், இது தவறான வதந்தி" என மறுத்தார். பிரகாஷ், "எங்களை டிரோல் செய்தவர்களை புறக்கணிக்கலாம்" என பதிலளித்தார்.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் பிரிவதாக அறிவித்தாலும், இசை நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்கின்றனர். ரசிகர்கள் இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களின் பரஸ்பர மரியாதை பாராட்டத்தக்கது. தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் பிரிந்தாலும், அவர்களின் இசை பயணம் தொடரும்.
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த தருணம் வந்தது..! 'கம்பி கட்ன கதை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!