×
 

தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் செய்யும். கடந்த கால படங்களின் தலைப்புக்கூட நம்மை அஞ்சி நடுங்க வைத்த சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. முந்தைய படத்தை போன்றே புதிய ஜென்ம நட்சத்திரம் திரைப்படமும் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர்  திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்தப் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது. 

படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், "முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். படத்தை பார்க்கும் போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகள் திருமணத்தில் 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கணேஷ்!

இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார். 

ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.  இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

இதையும் படிங்க: கவர்ச்சி கோதாவில் குதித்த ரச்சிதா மகாலட்சுமி! இடையழகை காட்டவே இப்படி பட்ட போஸ்ஸா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share