×
 
☰

80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

மதுரையில் ஜெயிலர் 2 கொண்டாட்டமாக 80 அடி போஸ்டர் வைக்கப்பட்டது.

80 அடி நீள ரஜினி போஸ்டருடன் மதுரையில் ஜெயிலர் டு கொண்டாட்டம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவரப்போகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயிலர் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நிலையில் ஜெயிலர் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நாளை ஜெயிலர் 2 உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் மதுரையில் உள்ள திரையரங்களில் ரஜினிகாந்த் கட்அவுட் மற்றும் போஸ்டர்கள் முழுமையாக அலங்கரிக்க துவங்கியிருக்கிறது.

மதுரை அரசரடி சோழமலை திரையரங்கில் மதுரை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பாக சுமார் 80 அடி நீளம் ரஜினி போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது மேலும் அ படத்தில் இடம் பெறுகின்ற வசனங்கள் ONE MOON ONE SUN ,போர் தொடங்கிடும் ஓர் படை இறங்கிடும். ஓர் கொடி பறந்திடும் ஓரு கரம் உயர்ந்திடும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திரையரங்கம் முழுவதுமாக ஒட்டப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ‘ரத்தமாவே’ பாடலில் மகன் பெயரைப் பயன்படுத்திய விக்னேஷ் சிவன்..!! கெட்ட வார்த்தையில் திட்டிய நெல்சன்.. ஜெயிலர் 2 பாடலிலும் இதே வேலையா?

அந்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் இன்றே பால் அபிஷேகம் செய்து தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் ரஜினிகாந்த் பல படங்கள் வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஜெயிலர் 2படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.நாளை உற்சாகமாக மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகி அழகர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அப்பா CM ஆக இருந்தும் இந்த நிலைமையா...!! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஜேசன் சஞ்சய்யின் சிக்மா.. வசூலில் படுதோல்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share